தமிழ்நாடு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்குச் சுழற்சி காரணமாக, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு!
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு!
வானிலை நிலவரப்படி, வட ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் தென் ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை

செப்டம்பர் 16: வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை

செப்டம்பர் 17: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு

செப்டம்பர் 18: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு

செப்டம்பர் 19: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம்

இந்தத் தொடர் மழை காரணமாக வெப்பநிலையின் தாக்கம் சற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மழை காரணமாக அதிகபட்ச வெப்பநிலை சுமார் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.