சென்னையின் கிண்டி பகுதியில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஓட்டலில் செயல்பட்டு வரும் பப்பில், புனிதமான கந்த சஷ்டி கவச பாடலை ஒலிக்கச் செய்து அதற்கு மது அருந்தியவர்கள் நடனமாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத நம்பிக்கையை இழிவுபடுத்தியதாகக் குற்றச்சாட்டு
இந்த விவகாரம் தொடர்பாகப் பாரத் இந்து முன்னணியின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் மோகன் மற்றும் பல வழக்கறிஞர்கள் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், அந்த ஓட்டலில் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் கந்த சஷ்டி கவச பாடலுக்கு வக்கிரமான முறையில் நடனமாடியது முருகப்பெருமானை இழிவுபடுத்தும் செயல் என்று தெரிவித்தனர். மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே அந்த ஓட்டல் நிர்வாகம் வாரந்தோறும் திட்டமிட்டு இந்தப் புனிதமான பாடலை இசைத்து, அதன் புனிதத்தைக் கெடுத்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
புனிதப் பாடலும் மது விருந்தும்
மந்திர வடிவில் அமைந்த கந்த சஷ்டி கவசத்தின் புனிதமான மரபுகள் மாற்றியமைக்கப்பட்டு, அதனை ஒரு கேலிப் பொருளாக ஓட்டல் நிர்வாகம் பயன்படுத்தியுள்ளதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுபானம் அருந்திய பெண்கள் நடனமாடுவதற்கு இந்த பாடலைப் பயன்படுத்தியது கோடிக்கணக்கான இந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர் மோகன் வேதனை தெரிவித்தார்.
அடுத்தகட்டப் போராட்ட எச்சரிக்கை
ஏற்கனவே இது குறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தை நாடியுள்ளதாகப் பாரத் இந்து முன்னணி தெரிவித்துள்ளது. இந்தப் புகாரின் மீதும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், அடுத்தகட்டமாக வடபழனி முருகன் கோவிலில் முறையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LIVE 24 X 7