தொழில்நுட்பம்

கூகுள் ஆண்ட்ராய்டு.. அட்டகாசமான 6 புதிய அம்சங்கள் வெளியீடு

கூகுள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான புதிய ஆண்ட்ராய்டு அம்சங்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு-

கூகுள் ஆண்ட்ராய்டு.. அட்டகாசமான 6 புதிய அம்சங்கள் வெளியீடு
June 2025 New Updates on Google Android
கூகுள் நிறுவனம் தொடர்ச்சியாக தங்களது ஆண்ட்ராய்டில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், நடப்பு ஜூன் மாதத்தில் கூகுள் மெசேஜில் குழு அரட்டைக்கு என தனி ஐகான், கூகுள் போட்டோஸில் AI அம்சங்களை பயன்படுத்தி புகைப்படத்தின் தரத்தை உயர்த்துவது என சில புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது.

ஜூன் 2025: புதிய ஆண்ட்ராய்டு அம்சங்கள்

கூகுள் மெசேஜஸ்: (Google Messages)

கூகுள் மெசேஜஸ் செயலியில் (Google Messages), குழு அரட்டைகளுக்கு (Group messages) புதியதாக பெயர்கள் மற்றும் ப்ரோபைல் ஐகான் போன்றவற்றை பிரத்யேகமாக நீங்கள் உருவாக்கலாம். இந்த அம்சமானது உங்கள் குழுவிற்கு தனித்துவமான அடையாளத்தை கொடுக்கும்.
Image

கூகுள் போட்டோஸ்: (Google Photos app)

கூகுள் போட்டோஸ் செயலியில் (Google Photos) எடிட்டிங் ஆப்ஷன் பன்மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் இயங்கும் புதிய ஆப்ஷன்கள் தற்போது பயனர்களுக்கு கிடைக்கும். உதராணத்திற்கு Reimagine ஆப்ஷன் வாயிலாக, உங்களது கற்பனைக்கு ஏற்றவாறு புகைப்படத்தை உருவாக்க இயலும். மேலும், தேவையற்ற அம்சங்களை உங்களது புகைப்படத்திலிருந்து நீக்க முடியும். உங்கள் புகைப்படத்தின் தரத்தையும் பன்மடங்கு உயர்த்த முடியும்.
Image

கூகுள் தனிநபர் பாதுகாப்பு செயலி: (Google Personal safety app)

இந்த செயலியின் பயன் இன்று வரை பலருக்கு தெரியாது என்று தான் சொல்லணும். நீங்கள் தனியாக நடந்து செல்வதாக இருந்தால், குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து விட்டு எமெர்ஜென்சி நம்பரில் உங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களின் எண்ணை உள்ளீட்டு நடக்கத் தொடங்கலாம்.

Image

உதாரணத்திற்கு ஒரு மணி நேரம் செட் செய்துவிட்டு, நீங்கள் நடக்க தொடங்குறீங்க. ஆனால், ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள் சென்று அடைய வேண்டிய இடத்தை அடையவில்லை என்றால், நீங்கள் உள்ளீடு செய்துள்ள எமர்ஜென்சி நம்பரிலுள்ள நபர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் அழைப்பு தானாக செல்லும். இதில் தான் தற்போது புதிய அம்சமாக Add time என்கிற ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நீங்கள் சென்றடைய வேண்டிய இடம், டிராபிக் போன்ற காரணங்களால் கால தாமதமாகினால், நீங்கள் கூடுதல் நேரத்தை உள்ளீடு செய்ய முடியும். இதன் மூலம் நோட்டீபிகேஷன் எமர்ஜென்சி நம்பரிலுள்ள நபர்களுக்கு தவறுதலாக செல்வதை தடுக்க இயலும். உங்களது பாதுகாப்பு மேம்படுத்தப்படும்.

ஜி போர்ட்: (Gboard app)

பரவலாக பயன்படுத்தப்படும் Gboard -கீ போர்டில் புதிய ஸ்டிக்கர் காம்பினேஷன் வழங்கப்பட்டுள்ளது. இது உங்களது உரையாடலை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கூகுள் ஸ்மார்ட்வாட்ச்: (Wear OS app)

கூகுளின் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்புகளை ஸ்மார்ட்போன் வாயிலாக இயக்க Wear OS ஆப் உதவுகிறது. இதில் புதியதாக மேம்படுத்தப்பட்டுள்ள அம்சம் என்னவென்றால், நீங்கள் ஸ்மார்ட்வாட்ச் வாயிலாக பணம் செலுத்துவதில் நிலவிய சிக்கல்கள் களையப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி விரைவாக பிரச்னைகளின்றி நீங்கள் பணம் செலுத்த இயலும்.

கூகுள் ஹோம் ஆப்ஷன்ஸ்: (google Home app)

ஸ்மார்ட் ஹோம் தயாரிப்பு பொருட்களை இனி கூகுள் ஹோம் (Google Home) செயலியில், உங்களுக்கு ஏற்றவாறு முன்னுரிமை அளித்து பயன்படுத்த இயலும். Wear OS ஸ்மார்ட்வாட்சினை ஆண்ட்ராய்டு மொபைலுடன் கனெக்ட் செய்வதன் மூலமும் ஸ்மார்ட் ஹோம் பொருட்களின் பட்டியலை விருப்பத்திற்கேற்ப இயக்க முடியும்.

Image

மேற்குறிப்பிட்ட இந்த புதிய அம்சங்கள், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வசதியான அனுபவத்தை வழங்கும் என கூகுள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்த மேலும் விவரங்களுக்கு, கூகுளின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவைப் (Google Blog) பார்வையிடலாம்.

Google New android Features