விளையாட்டு

AUS vs SA : ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங் தேர்வு..!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

AUS vs SA : ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங் தேர்வு..!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் நகரில் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டி20 உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளுக்கு பிறகு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மிகவும் பிரசித்துபெற்று விளங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கடந்த 2019-ஆம் ஆண்டு முதன்முறையாக ஐ.சி.சி-யால் தொடங்கப்பட்டது. இதில், முதல் சீசனில் நியூசிலாந்தும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை கைப்பற்றின. இந்த 2 சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

2025- ஆம் ஆண்டு 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனின் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் பவுமா பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை ஜியோஹாட்ஸ்டார் ஆப் மூலம் ஆன்லைனில் நேரலையாகவும், தொலைக்காட்சியில் காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் நேரலையில் பார்க்கலாம்.

முதன்முறையாக இப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா, 1998 ஆம் ஆண்டு ஐசிசி நாக்-அவுட் சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவரை ஐசிசி சார்பில் எந்த கோப்பையையும் வென்றதில்லை என்ற நிலையில், இதுவரையில் ஐ.சி.சி., கோப்பையை வெல்லாத தென் ஆப்ரிக்கா அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தன்னுடைய கோப்பை கனவை நிறைவேற்றிக்கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் போட்டியை ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

இரண்டு அணிகளும் லார்ட்ஸ் மைதானத்தில், மிகவும் சிறப்பான விளையாடி வரும் நிலையில், இந்த மைதானத்தில் நடைபெற்ற 23 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் மட்டுமே ஆஸ்திரேலியா தோல்வியடைந்துள்ளது. 23 போட்டியில், 12 இல் ஆஸ்திரேலிய அணியும், 7 போட்டியில் 5-ல் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளது.

அதே நேரத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இப்போட்டியில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் விளையாடும் என்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.