K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

சிந்தாதிரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி வேண்டாம்... உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்...!

கூவம் நதியில் மீன் கழிவுகள் கொட்டப்பட   வாய்ப்புள்ளதால், முறையான திடக்கழிவு மேலாண்மை வசதியை ஏற்படுத்தாமல், சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்படும் நவீன மீன் அங்காடியை துவங்க கூடாது என உத்தரவிடக்கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி... ஏற்பாடுகள் தீவிரம்..!

பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து, சுற்றுலா துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை எதிரொலி... காய்கறிகள், பழங்கள், பூக்கள் விலை கடுமையாக உயர்வு..!

தஞ்சை உழவர் சந்தை காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகைக்கான  காய்கறிகள், பழங்கள், பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து இருந்தும்  அதனை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

போகி பண்டிகை.. புகை மண்டலமான சென்னை..!

சென்னையில் போகி பண்டிகையை கொண்ட பழையன கழிதல் என்ற முறையில் மக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரித்ததால் சென்னையில் மாசு அதிகரித்து புகை மண்டகமாக காட்சி அளிக்கிறது.

போகிப்பண்டிகை கொண்டாட்டம்... பனிமூட்டத்துடன் புகை சூழ்ந்ததால் விமான சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையம் ஓடுபாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிமூட்டத்துடன் புகை சூழ்ந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொங்கல் விற்பனையால் கலை கட்டிய தியாகராய நகர்.. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க சென்னை ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.  மெட்ரோ பணிகள் மற்றும் மேம்பாலப் பணிகள் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. 

எடப்பாடி பழனிசாமி உறவினரின் வீட்டில் வருமான வரி சோதனை... முக்கிய ஆவணங்கள் ஆதாரங்கள் பறிமுதல்..!

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் தொடர்பான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் 10 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி

உலகில் இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது.  இந்தியா முழுவதும் விவேகானந்தரின் அருளும் ஆசீர்வாதமும் நிறைந்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா..? புறக்கணிப்பா..? பாஜக ஆலோசனை

சென்னையில் நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

யுஜிசி விதிகள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது, இது அவர்களுக்கான பலவீனத்தை காட்டுகிறது, இந்த நிலைப்பாடு அதிமுக சரிவுக்கான புள்ளியாக அமையும் என்று திருமா கருத்து தெரிவித்துள்ளார்.

கேக்கில் நெளிந்த புழுக்கள்.. கர்ப்பிணி மனைவி சாப்பிட்டதாக வாடிக்கையாளர் குமுறல்

போரூரில் பிரபல தனியார் பேக்கரி கடையில் இருந்து வாடிக்கையாளர் வாங்கி சென்ற கேக்கில் புழுக்கள்  இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் மக்களிடம் இருந்து அதிமுக அன்னியப்பட்டு போகாது- கெளதமி

அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் மக்களிடம் இருந்து நாங்கள் அன்னியப்பட்டு போக மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். 

அதிமுகவை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்- அமைச்சர் சாமிநாதன்

ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அதிமுகவை தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் நிலையில் இந்த தேர்தலிலும் புறக்கணித்து விடுவார்கள் என்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 1.8 கிமீ தொலைவிற்கு இரும்பு தடுப்பு வேலி..!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் வாடிவாசல் இருந்து வெளியேறிய பிறகு தப்பிச் செல்லாமல் இருக்க 1.8 கிமீ தொலைவிற்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

பெண்கள் பாதுகாப்பு.. பெப்பர் ஸ்பிரே மற்றும் SOS Alarm வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி..!

அதிமுக அலுவலகத்தில் நடைப்பெற்ற பொங்கல் விழாவில் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே மற்றும் SOS Alarm கருவியை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

கடத்தலில் 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கு.. காவல், ஐ.டி அதிகாரிகளின் ஜாமின் மனு தள்ளுபடி..!

தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர், வருமான வரித்துறை அதிகாரிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

கும்பகோணம் கோவில் குளங்களில், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த ஒத்துழைக்காத கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் 5-வது நாளாக சோதனை..!

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் கோவை, பெங்களூர், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கட்டுமான தொழில்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்.

வெளியான ஆடியோ.. பள்ளி ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு..தென்காசியில் அதிர்ச்சி

புளியங்குடி அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பணியாற்றிய பெண் ஆசிரியர் எட்டு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட காரணமாக வெளியான ஆடியோ விவகாரம்

உயர்ந்த விமானக் கட்டணம்.. உறைந்து போன பயணிகள்

மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம், திருவனந்தபுரம் விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு

யானை வழித்தடத்தில் மண் எடுத்த விவகாரம்.. சிறப்பு புலனாய்வு குழுவை நியமனம்..!

கோவையில் யானை வழித்தடத்தில்  மண் எடுத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. முதல்வர் VS எதிர்கட்சி தலைவர் சட்டப்பேரவையில் காரசார விவாதம்..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடங்கி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வரை முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சித்தலைவருக்கும் இடையிலான விவாதம் இறுதியில் சவாலில் நிறைவடைந்தது. 

தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - திருமாவளவன்

எங்களை ஜாதியை பாகுபாடு காட்டி ஓரங்கட்டப்பட்டாலும், ஒதுக்கி வைத்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் தான் மைய புள்ளி என்றும், தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. முதல் நாளில் 3 சுயேட்சைகள் வேட்பு மனுத்தாக்கல் ..!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் நாள் வேட்புமனுத்தாக்கலின் போது, 3 சுயேட்சைகள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. 20-ஆம் தேதிக்குள் விரிவான பட்டியலை வழங்க அறிவுறுத்தல்

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் வரும் 20-ஆம் தேதிக்குள் உட்கட்டமைப்பு நிர்வாகிகளை நியமனம் செய்வது தொடர்பான விரிவான பட்டியலை வழங்க வேண்டும்  என்று மாவட்ட பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.