K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. 3 சுயேட்சை வேட்பாளர்கள் தகுதி நீக்கம்!

கடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 3 சுயேட்சை வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் முறைகேடு.. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில்  அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்தால்,  சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் - நடனமாடி மகிழ்ந்த கீர்த்தி சுரேஷ் மற்றும் ராகவா லாரன்ஸ்

சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கிராமிய இசையுடன் கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றனர்.

ஆளுநர் கருத்தில் தடுமாற்றம் உள்ளது.. சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் தொடர்பாக ஒரு கருத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார் என்றும் அவரின் கருத்தில் தடுமாற்றம் உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

பேரணிக்கு அனுமதி மறுப்பு குறித்து விளக்கம்.. சென்னை காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு முந்தைய நாள் அனுமதி மறுத்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி சென்னை காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடியரசு தினத்தில் கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்... ஊரக வளர்ச்சி இயக்குநர் அறிவிப்பு..!

குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து கிராம மக்களும் பங்கேற்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

டங்ஸ்டன் பிரச்சனைக்கு மூலக்காரணமே அதிமுக தான்.. தங்கம் தென்னரசு அதிரடி பேச்சு

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.

சட்டத்தை வளைக்கும் முயற்சியில் திமுக அரசு  ஈடுபட்டுள்ளது.. ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் திமுக அரசு சட்டத்தை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய மனு.. நாளை விசாரணை..!

திமுக எம்.பி. கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

100 சார் கேள்விகளை கேட்க முடியும்.. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு

100 சார் கேள்விகளை அதிமுகவை நோக்கி என்னால் கேட்க முடியும் என்றும் அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

HMPV வைரசால் எந்த பாதிப்பும் இல்லை... அமைச்சர் பேரவையில் விளக்கம்

HMPV வைரசால் எந்த பாதிப்பும் இல்லை, இந்த வைரஸ் வீரிய தன்மை கொண்ட வைரஸ் அல்ல என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள் என்று அதிமுகவை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

இஸ்ரோ புதிய தலைவர் வி.நாராயணனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!

அரசுப் பள்ளியில் படித்து இஸ்ரோவின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்த வி.நாராயணனை எண்ணி வியக்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டி முன்பதிவு நிறைவு.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளுக்கும் 5,347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாகவும், ஆன்லைன் முன்பதிவு நிறைவு பெற்றதாகவும் மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஆளுநரை மத்திய அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் - CPM மாநில செயலாளர் பெ. சண்முகம்

மாநில அரசாங்கத்திற்கு இடப்புறமாக இருக்கக்கூடிய ஆளுநரை மத்திய அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஞானசேகரனால் வந்த வினை.. மண்டபம் தெருவில் வசிக்கும் மக்களுக்கு அதிர்ச்சி...!

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி ஞானசேகரன் வசிந்து வந்த வீடு கோயிலுக்கு சொந்தமானது என்று தகவல் வெளியான நிலையில், அப்பகுதியில், சோதனை மேற்கொண்ட நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரி 20க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. 3 நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான வேட்பு மனுதாக்கல் வரும் 10-ஆம் தேதி தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னாள் ஆணையருக்கு எதிரான ஊழல் வழக்கு ரத்து... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்லாவரம் நகராட்சி முன்னாள் ஆணையருக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

போதைப்பொருள் வழக்கு.. மன்சூர் அலிகான் மகனிற்கு ஜாமின் வழங்கி நீதிமன்ற உத்தரவு

போதைப்பொருள் தொடர்பான வழக்கில் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கிற்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு.. காவல்துறை முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் அதனை நீதிபதி ஏற்க மறுத்துள்ளார்.

துணைவேந்தர் தேடுதல் குழுவில் மாநில அரசு பிரதிநிதி நீக்கம்..? யுஜிசி புதிய விதிமுறை

பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழுவில் அரசு தரப்பில் இடம் பெறக்கூடிய பிரதிநிதி இடம்பெறுவாரா? என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது. 

உருவ கேலி செய்ததால் நடந்த விபரீதம்.. பள்ளி நண்பரை ஒரே குத்தில் கொன்ற இளைஞர்

உருவ கேலி செய்ததால் பள்ளி நண்பரை இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2-ம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு அவை ஒத்திவைப்பு

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. அதிமுக- தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டம் நடத்திய அதிமுக-தேமுதிகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆளுநரை காப்பாற்றும் அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி.. திமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

சென்னையில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக-பாஜகவை விமர்சிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.