K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

இளைஞர் கொலை.. நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. டிஜிபி உத்தரவு

நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்களை நியமிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

ஜாபர் சாதிக் ஜாமின் வழக்கு.. நீதிபதி விலகல்..!

ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்.. தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்...!

தாயின் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உள்ளாட்சி தேர்தல் இப்போது இல்லை... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

"வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள், SC/ST மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது” என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தொடர் விடுமுறை எதிரொலி.. விமான கட்டணங்கள் கிடுகிடு உயர்வு..!

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற தொடர் விடுமுறையால் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விமான கட்டணங்கள் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.

தேர்தல் விதி மீறல் தொடர்பான வழக்கு.. காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் விதி மீறல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம். பி. நவாஸ் கனி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெகுவிரைவில் மதுரையில் மெட்ரோ ரயில் ... திட்ட இயக்குனர் அர்ஜுனன் திட்டவட்டம்..!

நிச்சயமாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு... மேலும் இருவர் கைது..!

மனவளர்ச்சி குன்றிய  கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலை.. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே  இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மெரினாவில் களைக்கட்டும் உணவு திருவிழா.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்

மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.

R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3 சதவிகிதம் சலுகை.. ரயில்வே அறிவிப்பு

R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும்போது மூன்று சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. இறுதி அறிக்கை விரைவில் தாக்கல்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை முடியும் நிலையில் உள்ளதாகவும், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குரூப் 2ஏ முதன்மை தேர்வு முறையில் மாற்றம்.. டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு

குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் ஓஎம்ஆர் முறையில் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஜனவரி 6-ல் சட்டப்பேரவை கூட்டம் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

 2025 ஆம் ஆண்டிற்கான  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் விவகாரம்... புகார்தாரர் மனு தள்ளுபடி..!

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அளித்த புகார் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என   புகார்தாரர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் கல்வித் துறையில், தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது.. அமைச்சர் கோவி. செழியன்..!

உயர் கல்வித் துறையில், தமிழ்நாடு முதல் மாநிலமாக இருப்பதை சீர்குலைக்க தமிழக ஆளுநர் முயற்சி செய்வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக எம்.எல்.ஏ மீதான வழக்கு ரத்து... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

திமுக எம்.எல்.ஏ காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு... ஜாபர் சாதிக்கின் ஜாமின் மனு தள்ளுபடி..!

அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனல் மின் நிலையத்தில் திடீர் விபத்து.. இருவர் உயிரிழப்பு.. தேடுதல் பணி தீவிரம்

மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக் கைதிகளுக்கு அவசரகால விடுப்பு.. வழிகாட்டு விதிகளை வகுக்க உத்தரவு

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குகேஷால் நாடே பெருமை கொள்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

கொடநாடு வழக்கு.. தேவையற்ற கருத்துகளை நீக்க தயார்.. மனுவில் தெரிவிப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தெரிவித்த தேவையற்ற கருத்துக்களை நீக்க தயாராக இருப்பதாக, மேத்யூ சாமுவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஞ்சோலை விவகாரம்.. தமிழ்நாடு அரசு அணுகுமுறை நேர்மையாக இல்லை.. கிருஷ்ணசாமி காட்டம்

மாஞ்சோலை மக்களின் உண்மையான பிரச்சனையை தமிழ்நாடு அரசு முறையாக அணுகவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார். 

பாலீஸ் போட்டு தருவதாக முதியவரிடம் தங்கநகையை திருடியவர் கைது..!

பாலீஸ் போட்டு தருவதாக கூறி, ஏமாற்றி தங்க நகையை திருடிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்.. விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.