K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

யானை வழித்தடத்தில் மண் எடுப்பு - நீதிமன்றம் சரமாரி கேள்வி

கோவையில் யானை வழித்தடத்தில் 5 லட்சம் கனமீட்டர் மண் எடுத்தது யார், யாருக்கு வழங்கப்பட்டது? யார் பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பைக் டாக்ஸிக்கு கட்டுப்பாடு ஏன்? போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில இடங்களில் இன்று நாளையும் கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு, டெல்டா பகுதிகளில் குறுகிய நேரத்தில் அதீத கன மழை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஊழியர் மர்மான முறையில் மரணம்... போலீசார் விசாரணை..!

சென்னை ஓட்டல் அறையில் தனியார் தொலைக்காட்சி அதிகாரி மர்மான முறையில் உயிரிழந்து இருந்த நிலையில் மீட்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேமானந்தா அறக்கட்டளை சொத்துக்கள் பறிமுதல் விவகாரம்.. நோட்டீஸை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

பிரேமானந்தா அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.

Aadhav Arjuna Suspended: ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன் வீடியோ வெளியிட்ட ஆதவ் அர்ஜூனா

கொலை செய்யப்பட்ட சிறுவன்... உடல் மாடியில் தூக்கி வீசப்பட்டதா..? போலீசார் தீவிர விசாரணை

கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் தெருவில் உள்ள ஒரு வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுவனின் வீட்டு அருகே 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை - முதலமைச்சர் பேரவையில் விளக்கம்

அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. FIR-ல் உள்ள அதிர்ச்சி தகவல்..!

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில்,  ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை கஸ்தூரி அனுமதி மறுப்பு..!

சென்னை அசோக் நகரில் தெலுங்கு மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Aadhav Arjunan: ஆதவ் அர்ஜூனா சஸ்பென்ட் - விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் ஆர்ஜூனா 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

டங்ஸ்டம் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - தமிழக அரசு தீர்மானம்

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டி சிறப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்

பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை..!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2 நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு மற்றும்  அதனை தொடர்ந்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் ஈஷா கிராமோத்சவம்... அமைச்சர் K.N. நேரு வீரர்களுக்கு வாழ்த்து

திருச்சியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களை சந்தித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் K.N. நேரு வாழ்த்து தெரிவித்தார்.

இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வந்த பெண்கள் - அகல்விளக்குகளை பரிசளித்த ஜோதி அறக்கட்டளை

மண்பாண்டம் அகல் விளக்குகள் விலை ஏற்றம் என்று நினைக்காமல் வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்ககூடாது... கற்க விரும்பினால் அதை யாரும் தடுக்கக்கூடாது - சுதா சேஷய்யன்

ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்ககூடாது என்று மத்திய செம்மொழி தமிழாய்வு மையத்தின் துணைத்தலைவர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு... கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர்  ஆய்வு..!

ஃபெஞ்சல் புயலினால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர்  ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆதவ் அர்ஜுனா மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் - திருமாவளவன் உறுதி

விடுதலை சிறுத்தை கட்சியில் உள்ள 10 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவர் தான் ஆதவ் அர்ஜுனா. இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளதால் அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுபான விற்பனைக்கு ரசீது கட்டாயம் .. டாஸ்மாக் நிர்வாகம் அறிவுத்தல்..!

மதுபான கடைகளில் விற்பனையின் போது நுகர்வோருக்கு ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மக்களின் ஏரிகளில் 8,568 மில்லியன் நீர் மட்டம் கன அடி இருப்பு...

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில்  தற்போது 8,568 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லுக் அவுட் நோட்டீஸ் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்  வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.5000 கோடி நிலத்தை மீட்கக் கோரிய வழக்கு.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை என மோசடி செய்த கும்பல்.. தமிழக சிபிசிஐடி போலீசார் அதிரடி.. ஒருவர் கைது..!

சைபர் கொத்தடிமை பணிக்கு வெளிநாட்டிற்கு இளைஞர்களை அனுப்பி வைத்து மோசடி செய்த கும்பலை கொல்கத்தா விமான நிலையத்தில்  தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

புதிதாக 1.54 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டை -  உணவுப்பொருள் வழங்கல் துறை

புதிதாக சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது என   உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.