வெள்ள நிவாரண பணி.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரியார் சிலை உடைப்பு கருத்து விவகாரத்தில், திமுக எம்.பி. கனிமொழியை விமர்சனம் செய்தது மற்றும், டிவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்தது குறித்த வழக்கில், தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு தலா 6 மாத சிறை தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குன்னூர், உதகை இடையிலான மலை இரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 56,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை பாதிப்பினால், விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் இடையில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கடுமையாக வெள்ள பாதிக்களை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண் சரிவு காரணமாக 7 பேர் இடிபாடுகளில் சிக்கி நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று (டிச.1) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜயை குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இளம்பெண்ணிடம் மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
ஃபெங்கல் புயல் காரணமாக, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, சென்னை விமான நிலையம் சுமார் 12 அரை மணி நேரத்திற்கு பின் செயல்பட தொடங்கியது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது அதிகப்படியான காற்று வீசும் என்பதால் விமான நிலையம் அதிகாலை வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
புயல் காரணமாக அதிவேகமாக காற்று வீசியதால் சென்னை மெரினா புறக்காவல் நிலையம் சரிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள பேருந்து நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை பிராட்வேயில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடவுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் சூழலில், கடல் நீர் மீனவ கிராமங்களுக்குள் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.