K U M U D A M   N E W S

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின்

மறு உத்தரவு வரும் வரை வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

எம்எஸ்சி எல்சா-3 கப்பல் விபத்து: எம்எஸ்சியின் அகிடேட்டா-2 கப்பலை சிறை பிடிக்க நீதிமன்றம் உத்தரவு!

எம்எஸ்சி எல்சா-3 கப்பலில் விபத்து ஏற்பட்ட நிலையில், அந்நிறுவனத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில், இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், எம்எஸ்சியின் மற்றொரு கப்பலான அகிடேட்டா-II கப்பலையும் சிறை பிடிக்க செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவலாளி அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி..!

போலீசார் விசாரணையில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டாசு ஆலை வெடி விபத்து... ஒருவர் உயிரிழப்பு.. 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Shubman Gill: 148 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சுப்மன் கில் செய்த அரிய சாதனை!

Shubman Gill: இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் 150 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையினை நிகழ்த்தியுள்ளார். 148 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருவீரர் இப்படி எடுப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது - முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றசாட்டு!

தமிழகத்தில் திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதற்கு சிவகங்கையில் மாவட்டத்தில் நடைபெற்ற லாக்கப் மரணமே காரணம் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி குற்றச்சாட்டியுள்ளார்.

உணவில் அதிக உப்பு.. கணவன் தாக்கியதில் கர்ப்பிணி மனைவி தவறி விழுந்து உயிரிழப்பு!

உணவில்அதிக உப்பு சேர்த்ததாக மனைவியை கடுமையாக தாக்கிய கணவரால் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 21 முதல் தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் லாக்கப் மரணம்: வீடியோ எடுத்தவர் பாதுகாப்பு கேட்டு மனு

மடப்புரம் கோவில் இளைஞர் அஜித்குமாரை காவலர்கள் அடுத்து துன்புறுத்தும் வீடியோவை எடுத்த ஊழியருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி டிஜிபியிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

காவலாளி அஜித்குமார் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றி முதல்வர் உத்தரவு..!

திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.