K U M U D A M   N E W S

அதிமுக பாஜக தேர்தல் கூட்டணி 2026 வியூகம் குறித்து நயினார் இபிஎஸ் நெல்லையில் ஆலோசனை!

நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தல் 2026: ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணம் தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மனைவியைக் கொலை செய்து பேட்டிக் கொடுக்கச் சென்ற CRPF வீரர்.. சென்னையில் அதிரடியாக கைது!

மனைவியைக் கொலை செய்துவிட்டு சென்னைக்குத் தப்பி ஓடி வந்த சி.ஆர்.பி.எப்-வீரர், சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்குப் பேட்டி கொடுக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு தனது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இன்று ஆயுள் தண்டனை வழங்கிச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆணவக்கொலைகள் சுதந்திரம் வரும் முன்பு இருந்தே நடக்கிறது- கமல்ஹாசன்

நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு முக்கிய கடமையாக கருதுகிறேன் என கமல்ஹாசன் பேட்டி

பாலியல் வன்கொடுமை வழக்கு.. பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி.. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா தனது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசியல் தலைவர்களின் பெயர் இடம் பெறக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

அரசு புதிதாகத் தொடங்க உள்ள மற்றும் அமலில் உள்ள திட்டங்கள்குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“பாகிஸ்தானின் இதயம் அழிப்பு” –நாடாளுமன்றத்தில் அமித்ஷா அதிரடி

பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பியவர்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி கொன்றார் என அமித்ஷா பேச்சு

காதல் விவகாரச் சண்டையில் நீதிமன்ற ஊழியர் குத்திக்கொலை ..குற்றவாளி தப்பி ஓட்டம்!

திருவாரூரில் காதல் தொடர்பான சண்டையை விலக்கச் சென்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி தப்பி ஓடிய நிலையில், உடன் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் சமயத்தில் கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் தெரியும் - எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற தேர்தல் நெருங்கும்போது அதிமுக கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் எனத் தெரியும் திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.