K U M U D A M   N E W S

AI

பாடகர் மனோ மகன்களுக்கு முன்ஜாமின்..

இரு தரப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரை தாக்கியதாக பாடகர் மனோவின் மகன்கள் ஜாகிர், ரபீக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரும் 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.  

சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

சென்னை வேளச்சேரி அதிமுக பகுதி செயலாளர் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான மாம்பலம், திருவல்லிக்கேணி,கோவை ஆகிய ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

நடிகை பார்வதி நாயர் மீது சென்னை தேனாம்பேட்டை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். உதவியாளரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.5,000 குறைத்த தயாரிப்பாளர்.. ஆட்டோ ஓட்டுநருக்கு வழங்கிய வைரமுத்து.. நெகிழ்ச்சி!

‘நான் ஆட்டோக்காரன்.. நான் ஆட்டோக்காரன்..' பாடல் இன்றும் ஆயுத பூஜை பண்டிகையின் பிரதான பாடலாக ஆட்டோ ஓட்டுநர்களால் கொண்டாடப்படுகிறது. ‘ரா ரா ரா ராமையா..’ பாடலில் ஒரு மனிதனின் வாழ்க்கையை அப்படியே அழகாக அடுக்கியிருபார் இருப்பார் கவிப்பேரரசு. இது தவிர, ‘தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு..’ என்ற பாடலில் வார்த்தையில் புகுந்து விளையாடி இருப்பார்.

#BREAKING : முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

IND vs BAN Test : கொட்டும் மழையிலும் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் குவிந்தனர்.

தமிழில் கேளுங்க எனக்கு புரியும்! - Nose Cut செய்த ராணா!!

தமிழில் கேள்வி கேட்டால் தனக்கு புரியும் என்று ராணா டகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழில் பெரிய நடிகர்களுடன் மட்டுமே நடிப்பது ஏன்? - மஞ்சு வாரியர் சொன்ன பதில்

தமிழில் பெரிய நடிகர்களுடன் மட்டுமே நடிப்பது ஏன் என்று நடிகை மஞ்சு வாரியர் பதிலளித்துள்ளார்.

Tirupati Laddu Issue: திருப்பதி லட்டு-வில் கொழுப்பா?

திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

குளுகுளு ஊட்டியாக மாறிய சென்னை.. கொட்டித் தீர்க்கும் மழை.. மக்கள் மகிழ்ச்சி!

கடும் வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர். இந்நிலையில், சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும்விதமாக நகரின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 3.00 மணி முதல் மழை கொட்டியது.

”எனக்கு மெசேஜ் வேண்டாம், கமர்சியல் மூவி தான் முக்கியம்..” வேட்டையன் விழாவில் ஆட்டம் போட்ட ரஜினி!

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மனசிலாயோ பாடலுக்கு மாஸ்ஸாக ஆட்டம் போட்ட ரஜினிகாந்த், மேடையிலும் செம கெத்தாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Vettaiyan: “ரஜினி எளிமையானவர்... தலைவர் ஐடியா அது..” வேட்டையன் விழாவில் அமிதாப், அனிருத் அட்ராசிட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அனிருத், மஞ்சு வாரியர் பேசியது குறித்து இதில் பார்க்கலாம்.

Vettaiyan Audio Launch: வேட்டையன் இசை வெளியீட்டு விழா... ரஜினியின் புகழ் பாடிய பிரபலங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய பிரபலங்கள் ரஜினி குறித்து நெகிழ்ச்சியாக பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

Vettaiyan Prevue: ”என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எமன் வந்துருக்கான்..” ஆக்ஷனில் மிரட்டும் வேட்டையன் டீசர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Vettaiyan Audio Launch : வேட்டையன் இசை வெளியீட்டு விழா - வெயிட்டிங்கில் வெறியான ரசிகர்கள்

Vettaiyan Audio Launch: ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

Nayakaneri Panchayat President : நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி; உயர்நீதிமன்றம் அதிரடி

நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி; உயர்நீதிமன்றம் அதிரடி

மாணவர்களே மறக்காதீர்கள்..!! - வேண்டுகோள் வைத்த இபிஸ்

மாணவர்கள் குறிக்கோள் தவறாமல் கல்வி கற்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திடீர் புளியோதரை போல் திடீர் துணை முதல்வர்... தமிழகத்தில் ரத்த ஆறு... ஆர்.பி உதயகுமார் பேச்சு!

உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கினால் தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஓடப்போகிறது? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Ind VS Ban: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்... இந்திய அணி முன்னிலை... பும்ரா புதிய சாதனை!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளதோடு, இரண்டாவது இன்னிங்ஸை நிதானமாக தொடங்கியுள்ளது.

விஜய் செய்வது கொஞ்சமாவது நியாயமா இருக்கா?... நம்பிக்கை இல்லாதவர்கள் கைகளில் கோயில்... தமிழிசை சரமாரி கேள்வி

Tamilisai Soundararajan on Animal Fat in Tirupati Laddu : திருப்பதியில் ஊழல் செய்வதற்குதான் லட்டில் விலங்கு கொழுப்பு கலந்துள்ளனர். இந்த சம்பவம் மக்களின் உணர்வுகளோடு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அனல் பறக்கப்போகுதாம்... வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் மக்களே!

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (20.09.2024 மற்றும் 21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சூட்கேசில் பெண் உடல்.. தரதரவென இழுத்து சென்ற கொடூரன் - அதிர்ச்சி காட்சி வெளியீடு

சென்னை துரைப்பாக்கம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்டு உடலை சூட்கேசில் வைத்து இழுத்து செல்லும் சிசிடிவி வெளியானது.

கடவுளை வைத்து அரசியல் செய்கிறார் சந்திர பாபு நாயுடு.. - ஜெகன் மோகன் குற்றச்சாட்டு

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார் 

இந்தியாவில் களைகட்டும் IPhone 16 வியாபாரம்... மீன் வாங்கக் கூட இவ்வளவு கூட்டம் இருந்தது இல்லை!

இந்தியாவில் ஆப்பிள் iphone 16 சீரிஸ் போன்களின் விற்பனை தொடங்கிய நிலையில், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நின்றபடி காத்திருந்து iphone 16 போன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும்.. - அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

சட்டக்கல்லூரிகளில் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியதுடன் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அக்.3க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது