K U M U D A M   N E W S

Chennai

மக்களே உஷார்… மீண்டும் அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்திற்கு அடுத்த 1 மணி நேரத்திற்கு அதிகனமழைக்கான வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எதிரொலி... சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

சென்னையில் பெய்த கனமழையால் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மிரட்டல் விடுத்த மர்ம நபர்... பரபரப்பான சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் படையினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது.

கால்பந்து விளையாட்டு மைதானம் தனியார் மயம்... தீர்மானம் வாபஸ்

சென்னையில் செயற்கை புல் கால்பந்து விளையாட்டுத் திடல்களை தனியார்மயமாக்கும் தீர்மானத்தை திரும்பப்பெற மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. மாநகராட்சியின் இந்த தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

சட்டென மாறிய வானிலை... சென்னையை குளிர்வித்த மழை

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் எனவும் வானிலை அய்வு தெரிவித்துள்ளது.

வெளுக்கப்போகும் கனமழை... தீபாவளிக்கு வெடி எல்லாம் புஸ்.. ஆகிடுமோ?

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 30) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 3 லட்சம் பேர்.. சென்னையை காலி செய்த மக்கள்

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தீராத ராகிங் கொடுமை - தலைநகரில் நடந்த கொடூரம்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் 3ம் ஆண்டு மாணவர் ராகிங் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5ம் ஆண்டு மாணாவர்கள் 2 பேர் மீது கீழ்ப்பாக்கம்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Diwali 2024: சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்... ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

கிளாம்பாக்கத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் | Diwali 2024 | Kumudam News

கிளாம்பாக்கத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் | Diwali 2024 | Kumudam News

ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் வழக்கு... ACP விசாரணைக்கு ஆஜர்

சென்னை நீலாங்கரையில் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் நீலாங்கரை உதவி ஆணையர் பரத், மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

Diwali Flight Tickets: என்ன கொடுமை சாரே இது..? விமான டிக்கெட் கட்டணம் உயர்வு... தீபாவளி அட்ராசிட்டி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருச்சி, கோவை, சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - அடித்தது எச்சரிக்கை மணி..!

தமிழ்நாட்டில் நவம்பர் 1ம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேவநாதனுக்கு ஜாமின் - "முடியாது" சொன்ன ஐகோர்ட் - கசிந்த மிக முக்கிய தகவல்

சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அரசுக்கு எதிராக குவிந்த விளையாட்டு வீரர்கள்... காரணம் என்ன..?

சென்னை சைதாப்பேட்டை அம்மா பூங்கா உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள கால்பந்து திடல்களை தனியார் மயமாக்க முடிவெடுத்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கு கால்பந்து விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் உள்ள அம்மா பூங்கா முன்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மக்களுக்கு Happy News..! 14 மாதங்களுக்கு பிறகு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே ரயில் சேவை தொடக்கம்

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்குப் பிறகு பறக்கும் ரயில் சேவை தொடங்கியது. 2 மார்க்கங்களிலும் தலா 45 ரயில் சேவைகள்  இன்று முதல் இயக்கப்பட உள்ளன. 

களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்... கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தியாகராயநகர் உட்பட சென்னையின் பல பகுதிகளிலும் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. கடை வீதிகளில் புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் வாங்க மக்கள் அதிகளவில் கூடியதால் நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது.

Metro Rail Diwali Bonus: சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ்!

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Non Executive பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை நோக்கி வந்த விமானங்கள்... திடீரென வந்த மிரட்டல்... விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை நோக்கி வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரசுப்பேருந்தில் ஏற்பட்ட திடீர் விபத்து... நடுவழியில் தவித்த பயணிகள்

சென்னை எழும்பூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தின் பக்கவாட்டு பகுதி சரிந்து விழுந்தது. நீண்ட நேரம் போராடியும் சரிசெய்ய முடியாததால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

Diwali Special Bus: தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா..? சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் ரெடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

காற்றின் திசை மற்றும் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 27) ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மருத்துவக்கல்லூரியில் பயங்கரம்.. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் கொடுமையால் மாணவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக்.26) 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Gas Leak in school in Chennai | அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள் என்ன நடந்தது..?

Gas Leak in school in Chennai | அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள் என்ன நடந்தது..?