துக்க நிகழ்வாக மாறிய RCB வெற்றி கொண்டாட்டம்: 10 பேர் உயிரிழப்பு
நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முதல் முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக, இன்று பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீரர்களை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.