K U M U D A M   N E W S
Promotional Banner

யாரை காப்பாற்ற ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர்... சந்தேகம் எழுப்பும் எடப்பாடி பழனிசாமி!

''காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது? கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டுதான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?''

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுன்டர்.. போலீஸ் அதிரடி... நடந்தது என்ன?

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் முக்கிய குற்றவாளி. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படையை திரட்டியதும், அவரை எங்கு வெட்டினால் உடனே இறப்பார்? என்ற திட்டங்களை தீட்டியதுடன், அதிக இடங்களில் ஆம்ஸ்ட்ராங்கை இவர் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு "ஸ்கெட்ச்" போட்டது இவர்தான்.. போலீசார் அதிர்ச்சி தகவல்...

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும், பாஜகவிற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வழியுறுத்தி வருகின்றன.

39 பந்துகளில் 100 மற்றும் 99 ரன்கள் - அதிரடி காட்டிய ஆஸி.. அதிர்ந்துபோன விண்டீஸ்

அதிரடியாக ஆடிய பென் டங்க் 34 பந்துகளில் [12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்] 100 ரன்களை கடந்தார்.

அவதூறு பரப்புவதில் திமுக பல அவார்டுகள் வாங்கி வைத்துள்ளது - ஜெயக்குமார் விமர்சனம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் திமுக அரசு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் தவறி விட்டதாக சாட்டை துரைமுருகன் குற்றம்சாட்டி இருந்தார்.

பட்டியலின மக்கள் முதல்வராக முடியாது; படுகொலையின் வலி பாஜகவுக்கு தெரியும் - ஏ.என்.எஸ்.பிரசாத்

அம்பேத்கரை கொண்டாடாத இயக்கம் திராவிட இயக்கம் என்பதை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் அம்பலப்படுத்தி வந்தார்.

Armstrong வழக்கில் நடப்பது இதுதான்.! - பகீர் கிளப்பும் பூவை ஜெகன்மூர்த்தி

பகுஜன் சமாஜ்வாதி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் குறித்து பூஜை ஜெகன் மூர்த்தி குமுதம் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

மன்னிப்பு கேட்கும் வழக்கமில்லை... சிறைக்கு சென்றவர் செல்வபெருந்தகை - அண்ணாமலை காட்டம்

ஆருத்ரா விவகாரத்தில் பாஜகவினர் தொடர்பு இருந்தால் 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

எனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.. உளவுத்துறைக்கு இதுதான் வேலையா - அன்புமணி கோரிக்கை

தமிழ்நாட்டின் மொத்த உளவுத்துறையும் இந்த 20 நாட்களாக விக்கிரவாண்டி தொகுதியில் இருந்துள்ளார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் 2 உளவுத்துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். அதுதான் அவர்களது வேலையா?

குற்றப்பட்டியலில் 261 பாஜக தலைவர்கள்; 1977 வழக்குகள் - பட்டியல் போட்ட செல்வபெருந்தகை

செல்வபெருந்தகை ஒரு முன்னாள் குற்ற பதிவேட்டில் இருந்தவர் என்பதால் அவருக்கு இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. பாஜகவின் பதிவேட்டில் எந்த மாவட்ட தலைவரும் குற்றவாளியாக, ரவுடிகளாக இல்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள்.

Pa Ranjith: ஆம்ஸ்ட்ராங் கொலை... திமுக மீது குற்றச்சாட்டு... பா ரஞ்சித்துக்கு போஸ் வெங்கட் அட்வைஸ்

பகுஜன் சமாஜ்வாதி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வாரம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்திருந்த இயக்குநர் பா ரஞ்சித், திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து பா ரஞ்சித்துக்கு நடிகர் போஸ் வெங்கட் அட்வைஸ் செய்துள்ளார்.

வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூக நீதியா?... 'திமுக' அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி!

''திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன்''

காவல்துறை மீது கோபம் உள்ளது; பழிவாங்க மாட்டோம் - அண்ணாமலை

திமுகவின் கைபாவையாகவே சில காவலர்கள் மாறிவிட்டார்கள். எங்களுக்கு ஆட்சி அதிகாரம் வரும் போது திருத்தம் செய்ய பாப்போம்; பழி வாங்க மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு மட்டும்தான் தெரியும்.. எல்லாம் பாகப் பிரிவினை சண்டை - இ.பி.எஸ். தாக்கு

கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினருக்கு மட்டுமே தெரியும்.. எல்லாம் பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று  நினைக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை - புதிய காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்பேன் என்று சென்னை காவல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், ஆருத்ரா நிறுவனத்திற்கும் தொடர்பா? - செல்வபெருந்தகை வலியுறுத்தல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஆரூத்ரா கோல்ட் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளாதா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்; 'ஜெய்பீம்' முழக்கத்துடன் பிரியாவிடை கொடுத்த மக்கள்!

வழிநெடுக கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தினார்கள். 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் சூழ ஆம்ஸ்ட்ராங்க் உடல் எடுத்து செல்லப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்ட சந்தனப் பெட்டியில் என்ன வாசகம் இடம் பெற்றது?

ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்ட உள்ள சந்தனப்பெட்டியில் சமத்துவ தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் என்று எழுதப்பட்டு உள்ளது.

அவர்கள் மீது நம்பிக்கை இல்லை - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து பிரேமலதா விளக்கம்

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Armstrong வழக்கு சிபிஐ விசாரிக்க வேண்டும்! - ஷாலின் மரியா லாரன்ஸ்

Armstrong-ன் விவகாரம் இதோடு முடியாது தொடரும்.. - Journalist Varahi Exclusive Interview

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொத்தூரில் அடக்கம் - மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம்

திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை... ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி குற்றச்சாட்டு!

''தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலை என்றால், நமக்கு என்ன நிலை ஏற்படும்? என எளிய மக்கள் அஞ்சுகின்றனர். ஆகேவ சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும்''

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு... 2 முறை வழக்கு ஒத்திவைப்பு!

''அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் தேவைப்படும். ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது''

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி... இன்று சென்னை வருகிறார் மாயாவதி... போலீசார் குவிப்பு!

ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.