இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள 'மாரீசன் ' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது.
இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வடிவேலு பெரும்பாலான படங்களில் நடித்திருந்தாலும், உணர்ச்சி பொங்கும் எமோஷனல் நிறைந்த கதாபாத்திரங்களிலும் பின்னி பெடல் எடுப்பார் என்பது ஊர் அறிந்ததே. தனது இரண்டாவது இன்னிங்ஸில் மாமன்னன் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த நிலையில், வடிவேலுவினை வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்டியுள்ளது மாரீசன் திரைப்படத்தின் டீசர்.
பழைய பாடல் ஒன்றுடன் தொடங்கும் டீசர், ஒரு த்ரில்லரை நோக்கி முடிகிறது. ரசிகர்களின் எதிர்ப்பார்பினை நிச்சயம் மாரீசன் படத்தின் டீசர் இரட்டிப்பாகியுள்ளது என்றால் மிகையல்ல. தற்போது வரை இப்படத்தின் டீசரை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில், 'மாரீசன்' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து படக்குழு புதிய அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி, இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5:04 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரெய்லர் குறித்து அப்டேட் கிடைத்ததால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும், பகத் பாசில் - வடிவேலு ஆகியோரின் ‘மாரீசன்’ திரைப்படம், விஜய் சேதுபதி - நித்யா மேனன் ஆகியோரின் ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ஒரே நாளில் (ஜூலை 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Get ready for #Maareesan Trailer Releasing Tomorrow at 5:04 PM
— Actor Vivek Prasanna (@actorvivekpra) July 13, 2025
The wait ends, The magic begins !!
A @thisisysr Musical
Produced by @SuperGoodFilms_ #FaFa #MaareesanTrailer #SudheeshSankar @actorvivekpra #FiveStar @krishnakum25249 @moorthyisfine @dopkalai @sreejithsarang pic.twitter.com/0uklXTHyEE