பிரதமர் நரேந்திர மோடி, இன்று பெங்களூருவில் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் மற்றும் ஓட்டுநர் இல்லாத மஞ்சள் தடம் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடியின் பெங்களூரு வருகை
பிரதமர் மோடி தனி விமானம் மூலம் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு இன்று காலை 10.30 மணிக்கு வந்தடைந்தார். பின்னர், அவர் சாலை மார்கமாக நேரடியாக பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்குச் சென்றார்.
வந்தே பாரத் ரயில் சேவை
பெங்களூரு கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்தில் இருந்து, பெங்களூரு - பெலகாவி, அமிர்தசரஸ் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் (அஜ்னி) - புனே ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பெங்களூரு - பெலகாவி ரயில் மட்டும் நேரடியாகத் தொடங்கப்பட்டது. மற்ற இரண்டு ரயில்கள் காணொளி வாயிலாகத் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த அதிவேக ரயில்கள் பயண நேரத்தைக் குறைத்து, பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை
மேலும், பெங்களூருவில் மக்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த ஓட்டுநர் இல்லாத மஞ்சள் தடம் மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆர்.வி.ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த மஞ்சள் தடம் மெட்ரோ ரயில் சேவை, ரூ.7,160 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தடத்தில் 16 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த புதிய பாதை திறக்கப்பட்டதன் மூலம், பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவை 96 கிலோ மீட்டருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடியுடன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.