உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டம், தாராலி பகுதியில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு காரணமாக, கனமழை பெய்து பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேகவெடிப்பால் தாராலி பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் திடீரெனக் காட்டாற்று வெள்ளம் எழுந்தது. இந்தவெள்ளம் பல கட்டிடங்களை இடித்துச் சென்றதுடன், வீடுகள், தங்கும் விடுதிகள், சாலைகள் உள்ளிட்டவை கடுமையாகச் சேதமடைந்தன. சுமார் 20க்கும் மேற்பட்ட தங்குமிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
கீர் கங்கை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. பல பொதுமக்கள் வீடுகளில் சிக்கிக்கொண்ட நிலையில், சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும், பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புக்கருதி, ஆற்றங்கரையை அணுக வேண்டாமெனப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மீட்புப் பணியில் தற்காலிகமாகப் பாதுகாப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF), இராணுவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் ஈடுபட்டு வருகின்றன.
அதேபோல், 2வது முறையாக மேகவெடிப்பு ஏற்பட்டதில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சாலையில் கிடக்கும் பாறைகளை அகற்றும் பணி நடைபெறுகிறது
இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.