கேரளாவில் உள்ள கனரா வங்கியின் கொச்சி மண்டல மேலாளர், வங்கிக் கேண்டீனில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வங்கி ஊழியர்கள் அலுவலகத்தில் 'பீஃப் திருவிழா'வை ஏற்பாடு செய்து, பரோட்டாவுடன் மாட்டிறைச்சியைப் பரிமாறியுள்ளனர்.
போராட்டத்தின் காரணம்
சமீபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் கனரா வங்கியின் கொச்சி கிளையில் மண்டல மேலாளராக பொறுப்பேற்று கொண்டார். அவர் பொறுப்பேற்றதில் இருந்து அவர் ஊழியர்களுக்கு மனா ரீகிட்டயாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கேண்டீனில் இனி மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதானால் அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் அடுத்த நாளைளே 'பீஃப் திருவிழா'வை ஏற்பாடு செய்துள்ளனர்.
பணியாளர்கள் விளக்கம்
வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பான BEFI-யைச் சேர்ந்த ஊழியர்கள்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டம் குறித்துப் பேசிய கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எஸ். அனில், "இங்குள்ள கேண்டீனில் குறிப்பிட்ட சில நாட்களில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவது வழக்கம். ஆனால், இனி மாட்டிறைச்சி பரிமாறக் கூடாது என்று மேலாளர் உத்தரவிட்டுள்ளார். ஒரு வங்கி இந்திய அரசியல் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். உணவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் தங்களுக்குப் பிடித்த உணவைத் தேர்வு செய்ய உரிமை உள்ளது. நாங்கள் யாரையும் மாட்டிறைச்சி சாப்பிடச் சொல்லவில்லை. இது எங்கள் எதிர்ப்பைக் காட்டும் ஒரு போராட்டம்தான்" என்று விளக்கினார்.
அரசியல் ஆதரவு
இந்த நூதனப் போராட்டத்திற்கு அரசியல் தலைவர்களின் ஆதரவும் கிடைத்தது. இடதுசாரி ஆதரவு பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ.வான கே.டி. ஜலீல், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, "என்ன அணிய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன சிந்திக்க வேண்டும் என்பதை உயர் பதவியில் இருப்பவர்கள் முடிவு செய்யக் கூடாது. இந்த மண்ணின் இதயம் சிவப்பு. கம்யூனிஸ்டுகள் இருக்கும் வரை இங்கு யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராது. யாரும் காவிக்கொடியை உயர்த்தி மக்களின் நலனைக் குலைக்க முடியாது" என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் 2017-ஆம் ஆண்டு கால்நடை விற்பனை தொடர்பான உத்தரவுக்கு எதிராகவும் கேரளாவில் இதற்கு முன்பும் பல போராட்டங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.