மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் நலசோபரா பகுதியில் வசித்து வசித்து வந்தவர் விஜய் சவான் ( 40) . இவர் கடந்த சில 15 நாட்களுக்கு முன்பு காணவில்லை என கூறப்பட்டது. இந்த நிலையில் திரிஷ்யம் பட பாணியில் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த விஜய் சவானின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவரை கொன்ற மனைவி
விஜய்யை அவரது மனைவி கோமல் மற்றும் அவரது கள்ளக்காதலன் மோனு ஆகியோர் கொன்று புதைத்ததாகக் கூறப்படுகிறது. 12 நாட்களுக்கு முன்பு கோமல் வீட்டில் ஒரு குழி தோண்டி அதில் தனது கணவரை கொன்று புதைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது கணவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முயன்றதால் இந்தக் கொலை நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மனைவி கோமல் மற்றும் ஏழு வயது மகன் மற்றும் கள்ளக்காதலன் என்று கூறப்படும் மோனு ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர்.
நாடகமாடிய மனைவி
கடந்த வாரம், விஜய்யின் சகோதரர்கள், கடந்த 15 நாட்களாக அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். அவர்கள் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். வீட்டில் விசாரித்தபோது, விஜய் போரிவலி, கண்டிவலி அல்லது மலாட் ஆகிய இடங்களில் வேலைக்காக வெளியே சென்றிருப்பதாக அவரது மனைவி கோமல் அவர்களிடம் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து விஜய்யின் மனைவி கோமல் தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இது அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் கோமல் தங்களுக்கு சமோசாக்களை வாங்குவதும் அதில் பதிவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து விஜய்யின் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் நேற்று மாலை விஜய்யின் வீட்டின் கதவை உடைத்துத் தேடினர். அவர்களுக்கு அசாதாரணமான எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சமீபத்தில் ஓடுகள் மற்றும் டைல்ஸ் மாற்றப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா பாணியில் கொலை
மேலும் சில டைல்ஸ் மற்றும் வேறு நிறங்களில் மாற்றப்பட்டுள்ளதை பார்த்த குடும்பத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் தரையிலிருந்து சில அடிகளுக்குக் கீழே ஒரு கருப்பு பிளாஸ்டிக் பை புதைக்கப்பட்டிருப்பதையும் உள்ளே ஒரு சிதைந்த உடலையும் கண்டெடுத்தனர். இது தொடர்பான விசாரணையில், 12 நாட்களுக்கு முன்பு, மனைவி கோமல் அவர்களின் வீட்டில் 3.5 அடி ஆழமும் 6 அடி நீளமும் கொண்ட குழியை தோண்டியுள்ளார்.இரண்டு நாட்களுக்குப் பிறகு, குழியின் மீது புதிதாக டைல்ஸ் கற்களை பதித்துள்ளார்.
பணத்திற்காக கொலை?
வீடு புதுப்பிக்கும் ஒப்பந்ததாரரான விஜய், ஒரு மாதத்திற்கு முன்பு இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகையில் ரூ.6 லட்சத்தைப் பெற்றதாக கூறப்படுகிறது. அவரது கணக்கில் ஏற்கனவே ரூ.2 முதல் 3 லட்சம் இருந்ததுள்ளது. புதிய வீடு வாங்கத விஜய் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே தனது தற்போதைய வீட்டை தனது மனைவியின் பெயருக்கு மாற்றியுள்ளார். மேலும், விஜய்யின் மொபைல் போனை வைத்துக்கொண்டு அவரது மனைவி பல்வேறு ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுத்துள்ளார்.
பக்கத்து வீட்டுக்காரருடன் உறவு
விஜய்யின் மனைவி கோமல் பக்கத்தில் வீட்டு கல்லூரி மாணவனுடன் பழகத்தொடங்கி உள்ளார். இது நாளைடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. கோமல் மற்றும் கள்ளக்காதலன் மோனு இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து மோனுவின் தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் மோனுவின் செல்போனையும் பறிமுதல் செய்ததாக சொல்லப்படுகிறது. மோனு இரண்டு நாட்களுக்கு கல்லூரிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை, ஆனால் பின்னர் செல்போனை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் 7 வயது குழந்தையுடன் கள்ளக்காதல் ஜோடி தலைமறைவாகி உள்ளது. இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.