இந்தியா

200 ஆண்களால் பாலியல் வன்கொடுமை.. வங்கதேச சிறுமியின் பகீர் வாக்குமூலம்!

தன்னை 200 ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

200 ஆண்களால் பாலியல் வன்கொடுமை.. வங்கதேச சிறுமியின் பகீர் வாக்குமூலம்!
Sexual assault by 200 men.. Bangladeshi girl's harrowing confession!
மகாராஷ்டிராவில் பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட 14 வயது வங்கதேச சிறுமி, தன்னை மூன்று மாதங்களில் சுமார் 200 ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் குற்றம்சாட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14 வயது சிறுமி மீட்பு

கடந்த ஜூலை 26-ஆம் தேதி, பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 14 வயது சிறுமி உட்பட ஐந்து பெண்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் மூன்று பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக, இதுவரை பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், சிறுமியை பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்குக் கடத்தி வந்ததாகக் கூறப்படும் இரண்டு பெண்களும் அடங்குவர்.

சிறுமி அளித்த பகீர் வாக்குமூலம்

சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி, பள்ளியில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததால், வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அப்போது, ஒரு பெண் அவளை இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் கடத்தி வந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

சிறுமி தன்னை மூன்று மாதங்களில் சுமார் 200 ஆண்கள் வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த, ஹார்மோன் ஊசிகள் செலுத்தி, உடலில் சூடான ஸ்பூனால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், சிறுமிக்கு மயக்க மருந்துகளை கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது.

போலீஸ் நடவடிக்கை

இதைத்தொடர்ந்து, சிறுமி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கும்பல், பெண்களை மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைத் தேடி, பல்வேறு இடங்களுக்குக் காவல்துறைக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.