ஜார்க்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டத்தில் 22 வயது இளைஞர் ஒருவர், தனது காதலியின் குடும்பத்தினரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க, அவரது உடலை ரயில் தண்டவாளத்தில் வீசி, ரயில் விபத்து போல நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில், காதலியின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட அம்ரேந்திர சிங் என்ற பாப்லு என்பவரின் உடல், மெதினிநகரில் உள்ள ஜோகியாஹி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் நேற்று (ஆகஸ்ட் 16) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலில் இது ரயில் விபத்து என்று போலீசாரால் நம்பப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், இது ஒரு கொலை என்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், அம்ரேந்திர சிங்கும் அந்தப் பெண்ணும் கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு 2022-ஆம் ஆண்டு வேறு ஒருவருடன் திருமணம் நடந்த பின்னரும், இவர்களின் உறவு தொடர்ந்துள்ளது.
இந்த உறவுக்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி இரவு, அம்ரேந்திர சிங் தனது காதலியைச் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து வீட்டுக்குள் இழுத்துச் சென்று, கயிறால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
அதன்பிறகு, அவரது உடலை அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் ரயில் விபத்து போல் இருக்க வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு இதைச் செய்துள்ளனர். குற்றம் நடந்த இடத்திலிருந்து, கொலைக்குப் பயன்படுத்திய கயிறு, ஒரு துண்டு, மொபைல் போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.