போர் பாதுகாப்பு ஒத்திகை
போர் பாதுகாப்பு ஒத்திகை காரணமாக டெல்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி முழுவதும் இருளில் மூழ்கியது.
முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் மாநில அரசுகள் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறு மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு குறித்து விளக்கம்
இந்த நிலையில் முன்னதாக கூறியப்படி, நாடு முழுவதும் இன்று மாலை 4 மணி முதல் பல்வேறு மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் போர் ஏற்பட்டால் எப்படி பொதுமக்களை பாதுகாப்பது, பதுங்குகுழிகளில் தங்குவது உள்ளிட்ட யுக்திகள் குறித்து விளக்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் போர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை ராணுவ படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து போர் ஒத்திகை நடைபெற்றது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.