டெல்லியில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம், மர்ம நபர் ஒருவர் 4.5 சவரன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, சாணக்யபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்த எம்.பி. சுதா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினார்.
பாதுகாப்பு குறைபாடு, போலீசார் அலட்சியம்
செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. சுதா, "டெல்லியில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக இருக்கக்கூடிய தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர் ஒருவர் வாகனத்தில் வந்து, என்னிடம் இருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு எந்த பதட்டமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக சென்றார். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அப்பகுதியில் ஒரு போலீசாரும் பாதுகாப்புப் பணியில் இல்லை. சிறிது தூரம் சென்றபோது, அங்கு ரோந்து பணியில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரியிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து புகார் அளித்தோம். ஆனால், நிலைமையை புரிந்து கொள்ளாமல் காவல் நிலையம் சென்று புகார் அளியுங்கள் என்று அலட்சியமாக கூறினார். நான் அவரிடம் புகார் அளித்ததுமே மற்ற போலீசாருக்கு தகவல் கொடுத்திருந்தால் திருடனை சுலபமாக பிடித்திருக்கலாம்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
"டெல்லியில் உயர் பாதுகாப்பு உள்ள பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரிடமே செயின் பறிப்பு நடைபெறுகிறது என்றால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட பின்னர், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் விவகாரத்தை எழுப்ப முடிவு
மேலும், செயின் பறிப்பு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கு தொடர்பாக மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம் என்றும் எம்.பி. சுதா கூறினார். "தலைநகர் டெல்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதற்கான எடுத்துக்காட்டு" என்று அவர் தெரிவித்தார்.