தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இறுதிநாளில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் இன்று காலை தொடங்கிய கூட்டத்தில், இடைக்கால பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளித்தனர். இந்த விவாதத்தின் போது பேசிய உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ ஐயப்பன், யாரும் எதிர்பாராத வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினார்.
பரபரப்பை ஏற்படுத்திய உரை
விவாதத்தில் உரையாற்றிய ஐயப்பன், "வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகத் 'தலைவர்' மு.க.ஸ்டாலின் அவர்களே வர வேண்டும் என எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடும், அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் வாழ்த்துகளோடும் நானும் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்தார். ஒரு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் எம்.எல்.ஏ, ஆளுங்கட்சித் தலைவரை மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று வாழ்த்தியது அவையில் இருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.
ஓபிஎஸ் - முதல்வர் சந்திப்பு
இந்தச் சம்பவம் நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ-வான ஐயப்பன் இவ்வாறு பேசியிருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
அரசியல் பின்னணி
கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஐயப்பன். அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு அவர் ஓபிஎஸ் அணியில் நீடித்து வருகிறார். ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது ஐயப்பனின் இந்த உரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7