பாமக-வின் உள்கட்சி விவகாரங்கள் மற்றும் சின்னம் தொடர்பான சர்ச்சைகள் நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறியுள்ள நிலையில், சின்னத்தை முடக்கக் கோரிய மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் இன்று நடைபெற்றது.
நீதிமன்றத்தின் சரமாரிக் கேள்விகள்
விசாரணையின் போது, ஏற்கனவே உள்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், குடும்ப விவகாரத்தைக் குறிப்பிடும் வகையில், "மகன் தந்தை சொல்லைக் கேட்பதில்லையா?" எனத் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. அதற்கு ராமதாஸ் தரப்பில், "தந்தை சொல்லை மகன் கேட்பதில்லை" எனப் பதில் அளிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் விளக்கம்
இந்த விவகாரத்தில் வாதாடிய தேர்தல் ஆணையம், பாமக என்பது அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால், அதன் உள்கட்சி விவகாரங்களில் ஆணையம் தலையிட முடியாது எனத் தெளிவுபடுத்தியது. மேலும், சின்னத்தை முடக்குவது குறித்துத் தேர்தல் ஆணையம் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது என்றும் வாதத்தை முன்வைத்தது.
மனு தள்ளுபடி மற்றும் எச்சரிக்கை
ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, அதே விவகாரத்திற்காக உயர்நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதா என்று ராமதாஸ் தரப்பிற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதற்காக அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், இறுதியில் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

LIVE 24 X 7