ஐபிஎல் போட்டிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ப்ளே-ஆப் சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்தியா அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. ரோகித்,கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் இந்திய அணியினை வழிநடத்தப்போகும் கேப்டன் யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
ஒருப்புறம் மெயின் இந்திய அணி குறித்த தகவலுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட உள்ள இந்தியாவின் U-19 அணியானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த U-19 அணிக்கு, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி கவனம் ஈர்த்த ஆயுஷ் மத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய U-19 அணியில் இடம்பிடித்த வீரர்கள்:
இங்கிலாந்திற்கு பயணிக்கும் இந்திய U-19 அணி, ஜூன் 24 முதல் ஜூலை 23, 2025 வரை பல்வேறு வகையான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதற்கட்டமாக 50 ஓவர் பயிற்சி போட்டி, அதைத் தொடர்ந்து 5 ஒருநாள் போட்டி அத்துடன் இங்கிலாந்து U19 அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் (4-நாட்கள்) இந்திய U-19 அணி விளையாட உள்ளது என்று BCCI வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும், மும்பையினை சேர்ந்த ஆயுஷ் மத்ரே இந்திய U-19 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு மும்பை வீரரான அபிக்யான் குண்டு, துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் யார்ரா அந்த பையன்? என அனைவரையும் உச்சுக் கொட்ட வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்துக்கு எதிரான இந்திய U-19 அணியில் இடம்பிடித்துள்ளார். குஜராத் அணிக்கு எதிராக நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில், 35 பந்துகளில் சதமடித்து அசத்தியிருந்தார் வைபவ் சூர்யவன்ஷி.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையினை படைத்த வைபவ் சூர்யவன்ஷி இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கவனிக்கப்படும் முக்கிய வீரராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இதிலும், சிறப்பாக செயல்படும் பட்சத்தில் விரைவில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம். இவர்களை தவிர்த்து ஆஸ்திரேலிய U-19 அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய பஞ்சாப் பேட்ஸ்மேன் விஹான் மல்ஹோத்ரா மற்றும் கேரள லெக் ஸ்பின்னர் முகமது எனான், இருவரும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய U-19 அணி:
மெயின் இந்திய U-19 அணி: ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் & WK), ஹர்வன்ஷ் சிங் (WK), ஆர்எஸ் அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலான் மொஹேத்ஹாம், ஹெனில்த்ஹம் படேல், ஹெனில்த்ஹாம் படேல் எனான், ஆதித்யா ராணா, அன்மோல்ஜீத் சிங்
காத்திருப்பு வீரர்கள்: மன் புஷ்பக், டி தீபேஷ், வேதாந்த் திரிவேதி, விகல்ப் திவாரி, அலங்கிரித் ரபோல் (WK)