டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் MI நியூயார்க் அணிகளுக்கு இடையேயான சேலஞ்சர் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் MI நியூயார்க் அணி வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறிய MI:
மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிவின் அடிப்படையில் 16 புள்ளிகளுடன் வாஷிங்டன் ப்ரீடம் அணியும், 14 புள்ளிகளுடன் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், 14 புள்ளிகளுடன் சான் ப்ரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியும், 6 புள்ளிகளுடன் MI நியூயார்க் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் குவாலிஃபயர் போட்டியில் வாஷிங்டன் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்தானது. புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில் வாஷிங்டன் ப்ரீடம் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் போட்டியில் சான் ப்ரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியினை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி MI நியூயார்க் அணி சேலஞ்சர் சுற்றுக்கு தகுதி பெற்றது.
சொதப்பிய மஞ்சள் படை.. மிரட்டிய பொல்லார்ட்
இன்று நடைப்பெற்ற சேலஞ்சர் சுற்றில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் MI நியூயார்க் அணிகள் மோதின. டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரைரி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற MI நியூயார்க் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய TSK 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்தது. அகீல் ஹொசைன் 32 பந்துகளில் 55 ரன்களும், கேப்டன் டியூ ப்ள்ஸிஸ் 42 பந்துகளில் 59 ரன்களையும் குவித்தனர். மற்ற வீரர்களை பெரிதாக சோபிக்காத நிலையில் 7-வது வீரராக களமிறங்கிய டோனோவன் ஃபெரீரா 20 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க 167 ரன்களை MI நியூயார்க் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ். MI நியூயார்க் தரப்பில், டிரிஸ்டன் லூஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
MI நியூயார்க் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 6 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மைக்கேல் ப்ரேஸ்வல்லும் 8 ரன்களில் நடையை கட்ட மோனக் பட்டேல் மற்றும் கேப்டன் நிக்கோலஸ் பூரான் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய மோனக் பட்டேன் 49 ரன்களில் அவுட்டாகி அரைசத வாய்ப்பை நழுவவிட்டார். அதன்பின் களமிறங்கிய பொல்லார்ட் பந்துகளை நாலாப்புறமும் சிதறடித்தார்.
நிக்கோலஸ் பூரனின் பொறுப்பான ஆட்டத்தினாலும், பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தினாலும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த இலக்கை 19 ஓவர்களிலேயே எட்டி அசத்தியது MI நியூயார்க் அணி. பொல்லார்ட் 22 பந்துகளில் 47 ரன்களுடனும், பூரன் 36 பந்துகளில் 52 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
லீக் போட்டியில், 7 போட்டிகளில் தோற்று ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழைந்த MI நியூயார்க் அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட சான் ப்ரான்ஸிஸ்கோ மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 14 ஆம் தேதி நடைப்பெற உள்ள இறுதிப்போட்டியில் MI நியூயார்க் அணி,வாஷிங்டன் ப்ரீடம் அணியினை எதிர்க்கொள்ள உள்ளது.