விளையாட்டு

இந்திய தடகள வரலாற்றில் புதிய சாதனை.. முதல் முறையாக 90 மீட்டர் தாண்டிய நீரஜ் சோப்ரா!

இந்திய ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா தோஹா டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய தடகள வரலாற்றில் புதிய சாதனை.. முதல் முறையாக 90 மீட்டர் தாண்டிய நீரஜ் சோப்ரா!
இந்திய தடகள வரலாற்றில் புதிய சாதனை.. முதல் முறையாக 90 மீட்டர் தாண்டிய நீரஜ் சோப்ரா!
யூரோப்பில் நடைபெற்ற போட்டியில், நீரஜ் தனது ஆறாவது முயற்சியில் 90.12 மீ தூரம் எறிந்து, வரலாற்று சாதனையை பதிவு செய்தார். இதன்மூலம் அவர், 90 மீட்டருக்கு ஈட்டியை எறிந்ததன் மூலம் புதிய மைல்கல்லை படைத்துள்ளார். இந்த சாதனை குறித்து நீரஜ், “இன்று என் கனவு நிறைவேறியுள்ளது. இந்தியாவின் பெயரை 90 மீட்டர் லைனுக்கு அப்பாலும் கொண்டு செல்ல முடிந்ததில் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் யான் ஜெலெஸ்னியின் உலக சாதனை 98.48 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர் ஒருவர் 90மீ தாண்டுவது இதுவே முதல் முறை என்பதால், சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன. நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் உலக தடகள வீரர்களும் நீரஜின் சாதனைக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

டயமண்ட் லீக் தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்துள்ள இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கத்தார் தலைநகர் தோஹாவில் டயமண்ட் லீக் தடகள போட்டியின் 18வது சீசன் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90 புள்ளி 23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் 91 புள்ளி 06 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்த நிலையில் நீரஜ் சோப்ரா 2ம் இடம் பிடித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ராவின் இடைவிடாத அர்ப்பணிப்பால் தேசம் பெருமை கொள்வதாக தெரிவித்தார். நீரஜ் சோப்ராவின் சாதனை ஒரு குறிப்பிடத்தக்க தனிப்பட்ட மைல்கல்லைக் குறிப்பது மட்டுமல்லாமல், உலகின் உயரடுக்கு ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவராக அவரது அந்தஸ்தை வலுப்படுத்துகிறது.

மேலும் பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், தோஹா டயமண்ட் லீக் 2025 தொடரில் நீரஜ் சோப்ரா 90 மீ தூரம் ஈட்டி எறிந்தற்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.