விளையாட்டு

நார்வே செஸ் போட்டி: முதல்முறையாக கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்

நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர்1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் குகேஷ் தோற்கடித்து அசத்தியுள்ளார்.

 நார்வே செஸ் போட்டி: முதல்முறையாக கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்
உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை குகேஷ் முதல்முறையாக வீழ்த்தியுள்ளார்
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியா சார்பில் டி.குகேஷ் மற்றும் அர்ஜூன் எரிகைசி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் 6வது சுற்றில் உலக சாம்பியனான நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை டி.குகேஷ் எதிர்க்கொண்டார். இதனால் பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே கார்ல்சன் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இறுதியில் கார்ல்சனை 3-0 என்ற கணக்கில் குகேஷ் சாதுர்யமாக விளையாடி வெற்றி பெற்றார்.

இந்த தோல்வியால் அதிர்ச்சி அடைந்த கார்ல்சன் மேஜையை வேகமாக தட்டி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பின்னர் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்தார்.இந்த வெற்றியின் மூலம் நார்வே கிளாசிக்கல் சர்வதேச புள்ளி பட்டியலில் 8.5 புள்ளிகளுடன் குகேஷ் 3வது இடத்திலும், 9.5 புள்ளிகளுடன் கார்ல்சென் 2வது இடத்திலும் உள்ளார்.
உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை குகேஷ் முதல் முறையாக வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.