சிறையில் இருந்து சமீபத்தில் வெளியே வந்ததாகக் கூறப்படும் ஒரு ரவுடி கும்பல், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி, பொதுமக்கள் மற்றும் எதிர்க் கோஷ்டியினர் என 10-க்கும் மேற்பட்டோரைக் கத்தியால் வெட்டிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர் மீதான தாக்குதல்
சென்னை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவரும், கோயம்பேடு ஆட்டோ ஸ்டாண்டில் ஓட்டுநராகப் பணிபுரிபவருமான கணேசன் (எ) ஆட்டோ கணேசன் (37) மீது புழல், கொளத்தூர், ராஜமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், கத்தியுடன் பேருந்து நிலையம் எதிரே ஆட்டோ கணேசனைத் துரத்தியுள்ளது.
கணேசன் தப்பிப்பதற்காகக் கோயம்பேட்டில் உள்ள தனியார் உணவு விடுதிக்குள் புகுந்தபோது, அந்தக் கும்பல் ஓட்டலுக்குள் புகுந்து அவரை கொடூரமாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. தலை மற்றும் உடம்பில் வெட்டுக் காயமடைந்த கணேசன் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலுக்குள்ளான கணேசனும், தாக்குதல் நடத்திய விக்கி (எ) அமாவாசை தலைமையிலான ரவுடிக் கும்பலும் ஒரே வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்றும், இவர்களுக்குள் ஆதிக்கம் செலுத்துவதில் இருந்த பகை காரணமாகவே இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொளத்தூரில் பொதுமக்கள் மீது தாக்குதல்
இந்தத் தாக்குதலை நடத்தியது கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி விக்கி (எ) அமாவாசை தலைமையிலான கும்பல் என்று சி.எம்.பி.டி. போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இந்தக் கும்பல் போதையில் இந்த வெறியாட்டத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு 10.45 மணியளவில் கொளத்தூர், சிவசக்தி நகரில் வசிக்கும் வருண் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரைத் தேடிக் கத்தியுடன் சென்ற அந்தக் கும்பல், அவர்கள் தப்பிச் சென்ற நிலையில், வருணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராஜேஷ் மற்றும் அவரது தாயார் சந்திரா ஆகியோரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவர்களைக் கத்தியால் வெட்டியுள்ளது.
பழைய பகையில் அடுத்தடுத்து தாக்குதல்
இதைத் தொடர்ந்து, இரவு 11 மணியளவில் கிரிஜா நகர், செல்லியம்மன் கோவில் சந்திப்பில் வைத்து, மற்றொரு ரவுடிக் குழுவின் கூட்டாளி என்று கூறி கார்த்திக் என்ற நபரை அந்தக் கும்பல் கொடூரமாக வெட்டியுள்ளது. மேலும், அவருடன் இருந்த தமிழ்ச் செல்வன் என்பவரை வெட்டியதோடு, மனோஜ் கிரண் என்ற மற்றொரு நபரை பாட்டிலால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
சிகிச்சை மற்றும் காவல்துறை நடவடிக்கை
|
இந்தத் தொடர் தாக்குதலில் காயமடைந்த ராஜேஷ், சந்திரா, தமிழ்ச்செல்வன், மனோஜ் கிரண் உள்ளிட்டோர் பெரியார் நகர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்தியால் கொடூரமாக வெட்டப்பட்ட கார்த்திக் மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சில நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்த மாசி (விக்கி) தலைமையிலான இந்தக் கும்பல், போலீசாருக்குச் சவால் விடும் வகையில், தங்கள் ஆதிக்கத்தைக் காட்டவே இந்தக் கத்தி வெட்டை நடத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து சி.எம்.பி.டி. மற்றும் ராஜமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த ரவுடிக் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

LIVE 24 X 7