கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் உள்ள,வருவாய் நிலத்தில் அமைந்துள்ள பெப்பர் அருவிக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளிடம் சிலர் அனுமதியின்றி கட்டணம் வசூலித்து, சுற்றுலாப்பயணிகளை அருவிக்கு அனுமதித்து வந்த நிலையில், உரிய பாதுகாப்பு உள்ளதா என மாவட்ட ஆட்சியர் கொட்டும் மழையில் நேரில் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைக்காலம் தொடங்கியது முதல், ஊரின் கடைக்கோடி பகுதியில் அமைந்துள்ள நீர் வீழ்ச்சிகளுக்கு செல்வதை சில சுற்றுலாப்பயணிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் பெப்பர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு போக கரடு முரடான சாலையில் தான் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.சுற்றுலாப்பயணிகளை ஏற்றி செல்ல அனுமதியில்லாத பிக்அப்,கேம்பர் உள்ளிட்ட வாகனங்கள் வாயிலாக சுற்றுலாப் பயணிகள் இந்த அருவிக்கு வருகின்றனர். இந்த பெப்பர் அருவிக்கு செல்ல ஆற்றை கடந்து தான் சென்று வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த பெப்பர் அருவி வருவாய் நிலத்தில் அமைந்து இருப்பதால், இப்பகுதியை சேர்ந்த சிலர் அனுமதியின்றி நபர் ஒருவருக்கு 100 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்து கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் இன்ஸ்டாகிராம்,பேஸ் புக் மூலம் சிலர் வீடியோவை பதிவு செய்து வருவதால்,ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு இல்லாத முறையில் பிக்அப்,ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வதுடன், விபத்துகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வட்டாட்சியர் பாபு கடந்த வெள்ளிக்கிழமை நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதியில் இருந்த ஜீப் மற்றும் பிக் அப் வாகன ஓட்டுனர்களை எச்சரித்து இந்த அருவிக்கு செல்ல தடை விதித்தார். இதனையடுத்து நேற்றைய தினம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கொட்டும் மழையில் இந்த பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஜீப் வாகனத்தில் கரடு முரடான பாதையில் பயணம் மேற்கொண்டு அருவி பகுதிக்கு நேரில் சென்றார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், ”இந்த அருவிக்கு வரும் ஆண்கள், பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு உடை மாற்றும் அறை, முறையான நடைபாதை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்துவதுடன், காவல் துறையினர் உடன் தீயணைப்பு துறையும் இணைந்து பாதுகாப்பு தீவிரபடுத்தப்படும். மேலும் அட்வென்சர் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து ஜீப் வாகனங்களை இப்பகுதியில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் வருவாய் துறை,சுற்றுலா துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர். மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து ஆய்வு செய்துள்ளதால், இந்த அருவிக்கு செல்ல விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.