தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ 1,600 உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை!
Gold Rate
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால், முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சி நீடித்து வருகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து விற்பனையாகிறது.

முந்தைய நாள் விலை ஏற்றம்

நேற்று (டிசம்பர் 22) காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480-க்கு விற்பனையானது. மாலையில், சவரன் விலை மேலும் ரூ.720 உயர்ந்து, ரூ.1,00,560-க்கு விற்பனையானது. அதேபோல, கிராமுக்கு ரூ.90 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் இன்றைய விலை நிலவரம்

நேற்றைய தொடர் உயர்வின் விளைவாக, இன்று (டிசம்பர் 23) சென்னையில் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,02,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.12,770-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்

வெள்ளி விலையும் தொடர்ந்து புதிய உச்சத்தை நோக்கி நகர்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.234-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,000 உயர்ந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் நாள்தோறும் உயர்ந்து வருவது முதலீட்டாளர்கள் மற்றும் நகைப்பிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.