துபாயில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
முதல்வர் வெளிநாட்டு பயணம்- 'நல்லது என்றால் ஏற்க வேண்டும்'
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து பா.ஜ.க. முன்வைக்கும் விமர்சனங்கள் பற்றிய கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளிக்கையில், “ஒருவர் நல்லது செய்யும்போது, அது எந்தக் கட்சி என்று நான் பார்ப்பது இல்லை. நாட்டுக்கு நல்லது நடக்கிறது என்றால், அது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
'யாரையும் அவமானப்படுத்தக் கூடாது'
பீகாரில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரையின்போது பிரதமரின் தாயை அவமதித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “யாரையும் அவமானப்படுத்தும் வகையில் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஓட்டு காணாமல் போனது, பெயர் காணாமல் போனது என நான் ரொம்ப நாளாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய பெயரே காணாமல் போயிருக்கிறது. போய் அதைச் சரி செய்துகொள்வது எல்லாம் சின்ன விஷயம்தான்” என்றார்.
தெரு நாய்கள் பிரச்னை- 'தீர்வு ரொம்ப சிம்பிள்'
தொடர்ந்து, தெரு நாய்கள் பிரச்சனை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தீர்வு ரொம்ப சிம்பிள். விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்ன என்று தெரிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள். கழுதை எங்கேயாவது காணவில்லை என்று யாராவது கவலைப்படுகிறார்களா? கழுதைகள் காணாமல் போய்விட்டதா? நமக்காக எவ்வளவு பொதி சுமந்துள்ளது. கழுதையை இப்போது பார்ப்பதே இல்லையே. கழுதையை யாராவது காப்பாற்ற வேண்டும் என்று பேசுகிறார்களா? எல்லா உயிரினங்களையும் முடிந்த அளவுக்குக் காப்பாற்ற வேண்டும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு காப்பாற்ற வேண்டும். அதுதான் என்னுடைய கருத்து” என்று கூறினார்.