குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் சுங்கத் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சக்தீஸ்வர் (வயது 17), பிளஸ் டூ முடித்துவிட்டு திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் சேரவிருந்தார். சக்தீஸ்வர் தனது உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உடல் எடையைக் குறைப்பதற்காக அவர் கடந்த ஒரு மாத காலமாக யூடியூப் வீடியோக்களைப் பார்த்து, உணவுகளைத் தவிர்த்து வெறும் பழங்களை மட்டுமே உண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், சக்தீஸ்வருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இன்று (ஆடி அமாவாசை அன்று) வீட்டில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சக்தீஸ்வருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக மகனை குளச்சலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சக்தீஸ்வர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த குளச்சல் ஆய்வாளர் இசக்கிதுரை மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இளைஞரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நாகராஜன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் எடையைக் குறைக்கும் நோக்கில் கடைப்பிடித்த தீவிர உணவுமுறை காரணமாகவே இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக பெற்றோர் தரப்பில் கூறப்படும் நிலையில் இதுக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.