K U M U D A M   N E W S

இந்தியா

கேள்வி கேட்டதால் ஆத்திரம்...முதியவரை அடித்து இழுத்து சென்ற மருத்துவர்...மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு

வீடியோவில் மருத்துவரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டோம் என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

உச்சநீதிமன்றம் குறித்து பாஜக எம்.பி-யின் சர்ச்சை பேச்சு: கடிவாளம் போட்ட ஜே.பி.நட்டா

உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை பாஜக எம்பி நிஷிகாந்த் துபே விமர்ச்சித்த விவகாரம் சர்ச்சை ஆன நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எம்பி நிஷிகாந்த் கருத்து பாஜகவின் கருத்தல்ல என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அஜித் பட நடிகர் கைது...போதைப்பொருள் விவகாரத்தில் நடவடிக்கை

போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் திணறிய நடிகர், அவரது செல்போனில் காணப்பட்ட தடயம் மூலம் வசமாக சிக்கிக்கொண்டார்.

ரூ.2000-க்கு மேல பணம் அனுப்புனா GST உண்டா..? மத்திய அரசு விளக்கம்

ரூ.2000-க்கு மேற்பட்ட ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற செய்திக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

Up: சிறுவனின் சளி பிரச்சனைக்கு சிகரெட் சிகிச்சை.. வீடியோவால் சிக்கிய மருத்துவர்

உத்திரப்பிரதேசத்தில் சளி பிரச்சனைக்காக சிகிச்சை பெற வந்த சிறுவனை மருத்துவர் புகைப்பிடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுரோட்டில் அமர்ந்து டீ குடித்த இளைஞர்.. வீடியோ வைரலானதால் நேர்ந்த சோகம்

பெங்களூரில் நடுரோட்டில் அமர்ந்தபடி டீ குடித்து இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடி.. உதவி கணக்கு தணிக்கை அதிகாரி செய்த பகீர் செயல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளத்து வந்த உதவி கணக்கு தணிக்கை அதிகாரியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

புதிய வக்ஃபு சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இன்று பிற்பகல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

பாலியல் புகார்.. போலீஸை பார்த்ததும் தலைத்தெறிக்க ஓடிய அஜித் பட நடிகர்

தனியார் தங்கும் விடுதியில் போதை ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்திய நிலையில் அந்த விடுதியில் இருந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. குருகிராமில் கொடூரம்

குருகிராமில் தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த விமான பணிப்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி, அமித்ஷா தமிழில் புத்தாண்டு வாழ்த்து

இந்தப் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணா.. NIA காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், ராணாவை என்.ஐ.ஏ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் 18 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 6% ஆக குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.25% லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ரெப்போ வட்டு விகிதம் 0.25% குறைந்துள்ளதால், தால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைகிறது.

கோயிலுக்கு வருகை தந்த தலித் தலைவர்.. கங்கை நீர் தெளித்த பாஜகவினரால் பரபரப்பு

ராமர் கோயில் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் திகாராம் ஜூலி பங்கேற்ற நிலையில் அக்கோயிலை பாஜக தலைவர் ஞான் தேவ் அஹூஜா, கங்கை நீரை கொண்டு சுத்தம் செய்த சம்பவம் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது, அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 22 பேர்.. வெளியான அதிர்ச்சி தகவல்

உத்திரப்பிரதேசத்தில் 19 வயது இளம் பெண்ணை கடத்தி சென்று 22 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து மக்கள் தலையில் விழும் பேரிடி.. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட சில நிமிடங்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Excise duty on petrol: பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரி உயர்வு.. புலம்பும் மக்கள்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒரு லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திறப்பு விழா அன்றே பழுதான பாம்பன் பாலம்.. என்னதான் நடந்தது?

பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட பாம்பன் பாலத்தில் திடீரென பழுது ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

கப்பல் சென்று வர வசதியாக 72.5 மீட்டர் நீளத்திற்கும், 650 டன் எடை கொண்டதாகவும் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

சட்டமானது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

மராத்தியை கையில் எடுத்த நவநிர்மாண் சேனா...எச்சரிக்கை விடுத்த தேவேந்திர பட்னாவிஸ்

சட்டத்தை யாராவது கையில் எடுத்துக்கொண்டு, அத்துமீறினால் பொறுத்துக்கொள்ள முடியாது என மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

பிரதமர் மோடிக்கு இலங்கையில் உற்சாக வரவேற்பு...பயணத்திட்டம் என்ன...?

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்காவை பிரதமர் மோடி இன்று சந்திக்க உள்ள நிலையில், 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்னது மராத்தி தெரியாதா..? வங்கி மேலாளருடன் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம்

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் வங்கி மேலாளரை மராத்தியில் பேச சொல்லி நவ நிர்மாண் சேனா கட்சித் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாய்லாந்தில் பிரதமர் மோடி- உற்சாக வரவேற்பு அளித்த இந்தியர்கள்

விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தாய்லாந்து அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.