K U M U D A M   N E W S

அரசியல்

கார்த்தி சிதம்பரம்- இளங்கோவன் மோதல் உச்சம்.. தலையில் கைவைத்த செல்வபெருந்தகை.. என்ன நடக்கிறது?

Tamil Nadu Congress : கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து சண்டை போடு வருவதால் தமிழ்நாடு காங்கிரஸ் செல்வபெருந்தகை தலையில் கைவைத்து குழம்பி போய் உள்ளாராம். தொடர்ந்து நீண்டு வரும் உட்கட்சி பிரச்சனையை காங்கிரஸ் சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அடுத்த தேர்தலுக்கு வருவார்கள்.. காங்கிரஸ் கட்சியை கிள்ளுக்கீரையாக நினைக்கிறதா திமுக?

I Periyasamy Speech About Congress : தேர்தல் முடிந்து விட்டது; அடுத்த தேர்தலில் அனைவரும் வந்து சேர்ந்து விடுவார்கள் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளது, காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

எச்சில் எண்ணங்களை பிரதிபலிக்கும் பிறவிகள் நாங்கள் அல்ல... அமைச்சர் சேகர்பாபு பதிலடி

Sekar Babu on RB Udhayakumar Statement : மூன்றாண்டுகளாக சென்னையில் அம்மா உணவகத்தை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம்; 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு நாளாவது அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தாரா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

'திராவிட ராமர் ஆட்சி'.. திமுக அரசை பங்கமாய் கலாய்த்த சீமான்.. ஏன் தெரியுமா?

Seeman on Minister Raghupathi Speech : ''தமிழ்நாடு சட்ட அமைச்சரின் ;திராவிட ராமர் ஆட்சி;' பற்றிய கூற்றினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப்போக்க தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி திராவிட மாடலா? அல்லது இராமரின் மாடலா? என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு விளக்கி தெளிவுபடுத்த வேண்டும்'' என்று சீமான் கூறியுள்ளார்.

சாத்தூரில் குடியேறவுள்ள விஜய பிரபாகரன்? 4 தொகுதிகளை டார்கெட் செய்யும் தேமுதிக..

Vijaya Prabhakaran : நடிகரும் மறைந்த முன்னாள் தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் மறைந்த பிறகு, முழுநேர அரசியலில் ஈடுபட்ட விஜய பிரபாகரன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகரில் களமிறங்கி மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவிற்கு முடிச்சிப்போட வேண்டாம் - ரகுபதி ஆவேசம்

Minister Armstrong on Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுகவை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'முதல்வர் ஸ்டாலின் வழியை பின்பற்றுங்கள்'.. பிரதமர் மோடிக்கு தயாநிதி மாறன் அட்வைஸ்!

MP Dayanidhi Maran : ''தமிழ்நாட்டுக்கு வந்து தமிழை கற்க வேண்டும் என்றும் திருக்குறளை புகழ்ந்தும் பேசிய பிரதமர் மோடி இப்போது பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மறந்து விட்டார். பிரதமர் மோடி செய்த துரோகத்தை தமிழ்நாடு மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்'' என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

உதயநிதியின் தடால் புடால் விருத்து.. முக்கிய தலைகளை தாண்டி யாருக்கும் அழைப்பில்லை... என்ன காரணம்...?

Minister Udhayanidhi Stalin : லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக, கூட்டணி வெற்றி பெற்றது. அதற்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், நேற்று அமைச்சர் உதயநிதி விருந்து அளித்தார்.

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள்.. சமூக நீதி பேசுவதை ஏற்கிறோம் - தமிழிசை

Tamilisai Soundararajan : முதலமைச்சர் பதவியையோ துணை முதலமைச்சர் பதவியையோ திருமாவளவன் ஏன் கொடுக்க கூடாது என்று தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா?.. வைகோ, சீமான் ஆவேசம்.. மத்திய அரசுக்கு கண்டனம்!

''பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா? இதர மாநில மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையா? அல்லது வரி செலுத்தவில்லையா?'' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியா?.. பாஜகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

''வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

வரிக்குதிரையின் வரியை எண்ணிவிடலாம்! ஆனால்.. செல்லூர் ராஜூ பஞ்ச்...

Sellur Raju on DMK Government : மின்கட்டண உயர்வு மற்றும் நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகள் வழங்காததைக் கண்டித்து மதுரையில் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

இவரை தெரியவில்லையா?.. பழைய போஸ்டுகளை கிளரும் ரஞ்சித்திஸ்ட்டுகள்... சேகர்பாபுக்கு எதிர்வினை

Minister Sekar Babu on Pa Ranjith : அமைச்சர் சேகர் பாபு இயக்குநர் பா.ரஞ்சித் குறித்த கேள்விக்கு, அவர் யார் என்று தெரியாது என பதிலளித்ததற்கு ரஞ்சித் ஆதரவாளர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முக்கிய பொறுப்பு.. மாநில தலைவராக ஆனந்தன் தேர்வு!

BSP Armstrong Wife Porkodi : பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஆனந்தன் அந்த கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆம்ராஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கரூர் கோர்ட்டுக்கு வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் .. அதிமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு

ADMK Ex Minister MR Vijayabaskar in Karur Court : நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் கோரிய நிலையில் கரூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் செய்யப்பட்டார்.

திமுக ஃபர்ஸ்ட் எண்ட்ரி... ஓடோடி சென்ற ஈ.பி.எஸ் - தொடங்கியது தேர்தல் யுத்தம்..

Edappadi Palaniswami X Post vs Udhayanidhi Stalin Speech : 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அஇஅதிமுக தொடங்கி விட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோடிகள் புழங்கும் தொழிலுக்கு தடையாக இருந்தாரா ஆம்ஸ்ட்ராங்?....

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கோடிகளில் புழங்கும் தொழிலுக்கு தடையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லாவற்றிக்கும் ஜாதியை முன்னிறுத்துவதா? - யாரை கேட்கிறார் பேரரசு?

இயக்குநர் பேரரசு தனது முகநூல் பக்கத்தில் ஜாதி குறித்து பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

காங்கிரஸ் தலித்களுக்கு ஏதும் செய்யவில்லை.. மேடையில் போட்டுடைத்த பா.ரஞ்சித்.. செய்வதறியாது திகைத்த ரஞ்சன் குமார்!

காங்கிரஸ் மீது பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ரஞ்சன்குமார் இது தொடர்பாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஞ்சன்குமார் தொடர்ந்து மவுனமாக இருப்பதன்மூலம், காங்கிரஸ் மீதான பா.ரஞ்சித்தின் குற்றச்சாட்டை அவர் ஏற்றுக் கொள்கிறாரா? என்று நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடேங்கப்பா! திமுக இவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளதா?.. அதிமுக எவ்வளவு?.. முழு லிஸ்ட் இதோ!

39 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.1,740 கோடி ஆகும். இதில் திமுக உள்பட முதல் 5 கட்சிகள் மட்டும் மொத்தம் ரூ.1,541.32 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் ரூ.1,285 கோடி தோ்தல் நிதி பத்திரங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'நாங்கள் ரவுடிகள்தான்'.. பா.ரஞ்சித் ஆவேசம்.. திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

''தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் சமூகநீதி மாடலா? நான் திமுகவிற்கு எதிராக மட்டும் பேசவில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராகதான் பேசுகிறேன். அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள்'' என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

இன்றைக்கு ஷாக் அடிக்கவில்லையா? - முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் கேள்வி

ADMK Ex Minister Ramana To MK Stalin : மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியபோது, ஷாக் அடிக்கிறது எனக் கூறிய அதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, இன்றைக்கு ஷாக் அடிக்க வில்லையா? என முன்னாள் அமைச்சர் ரமணா கேள்வி எழுப்பியுள்ளார்.

சசிகலாவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை.. அவர் துரோகி.. மாநில செயலாளர் பளீர்..

சசிகலாவும் அதிமுகவின் துரோகிதான் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Vijaya Prabhakaran: “துரோகம், சூழ்ச்சியால் தேர்தலில் தோற்றேன்..” விஜய பிரபாகரன் அடுக்கிய குற்றச்சாட்டுகள்!

Lok Sabha Elections 2024 : நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் தோற்றுவிட்டேன் என தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து விஜய பிரபாகரன், இராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மின் கட்டணம்: திமுகவுக்கு எதிராக திரளும் எதிர்க்கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு!

மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து 22ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அமமுக தெரிவித்துள்ளது.