K U M U D A M   N E W S

அரசியல்

பாஜக சட்டமன்றக்குழு தலைவர் திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு!

தமிழக பா.ஜ.க புதிய தலைவருக்கான போட்டியில், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் பெயர் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் நேற்று இரவு திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

சிலிண்டர் விலை உயர்வு: அடுப்பு எரிய வேண்டுமா? மக்களின் வயிறு எரிய வேண்டுமா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில் 'நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

டாஸ்மாக் வழக்கு: அதிமுக-பாஜக தொடர்பு தெரிகிறது.. அமைச்சர் ரகுபதி விளாசல்

தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கை வைக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் விவகாரம்: திமுகவுக்கு ஏன் அச்சம் – இபிஎஸ் சரமாரி கேள்வி

டாஸ்மாக் விவகாரத்தில் திமுக அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை- மு.க.ஸ்டாலின் ஆவேசம்

மக்களின் முக்கியமான பிரச்சனைகளுக்கு விளக்கமளிக்காதவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை நான் சொல்ல முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தலைவர் போட்டியில் நான் இல்லை- அண்ணாமலை

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் அவமதிக்கும்படி நடந்து கொண்டுள்ளார் என்றும் அதற்கு முதல்வர், தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் கையெழுத்தாவது தமிழில் போடுங்கள்.. மோடி பரபரப்பு பேச்சு

தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எழுதும் ஆங்கில கடிதத்தில் கையெழுத்தாவது தமிழில் இருக்கலாம் அல்லவா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: தவெக போராட்டத்திற்கு அனுமதி.. போலீஸ் வைத்த டுவிஸ்ட்

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெறும் தவெக போராட்டத்திற்கு 16 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா: காரசார விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் நிறைவேற்றம்

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நீண்ட விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பின் மூலம் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் சுருக்கம் பொய்.. இஸ்லாமியர்களுக்கு பாஜக எப்படி நல்லது செய்யும்? எஸ்.வி.சேகர்

பாஜகவில் ஒரு முஸ்லிம் கூட நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை.  இவர்கள் எப்படி இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருப்பார்கள்? என்று நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.

பாஜக கூட்டு.. EPS-க்கு வேட்டு? வளர்ப்பு மகன் வாக்குமூலம்..! வேகமெடுக்கும் கொடநாடு வழக்கு

பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு செல்லலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் எடப்பாடி. சும்மா இருக்குமா தி.மு.க? கொடநாடு வழக்கு விசாரணைக்குள் எடப்பாடியை இழுத்துவிட்டு தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது ஆளும் தரப்பு என்பது தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திமுகவிற்கு சவால் விடுகிற யோக்கிதை இல்லாதவர்கள்.. விஜய்யை சாடிய ஆர்.எஸ்.பாரதி

திமுக ஆளுங்கட்சி என்பதால் அடக்கி வாசிக்கிறோம் என்றும், எங்களுக்கு சவால் விடுகிற யோக்கிதை இல்லாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் இந்துக்களை பார்த்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்- யோகி ஆதித்யநாத்

இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் இருந்து மத ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது- செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு கொடுக்கிறது. ஆனால், ஆளாத மாநிலங்களுக்கு ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

இபிஎஸ்க்கு பதில் அளித்த முதலமைச்சர்: அதிமுக – திமுக இடையே காரசார விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்  தொடர்பாக அதிமுக - திமுக இடையே காரசார விவாதம் நடந்தது.

நாளை கூடுகிறது காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டம்- முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், முக்கிய பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயை எதிர்த்து போட்டியிடுவேன்.. பவர் ஸ்டாருக்கு போன் போட்ட தவெக நிர்வாகி

விஜயை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறிய நடிகர் பவர் ஸ்டாருக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகி போன் செய்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவுடன் கூட்டணியா?- விஜய்க்கு அமைச்சர் முத்துசாமி பதில்

திமுகவிற்கு பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை

அதிமுக ஏன் நாடகம் நடத்துகிறது?- முத்தரசன் கேள்வி

மன்னராட்சி என்று சொன்னால் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்க முடியாது. அதை புரிந்து கொள்ள வேண்டும். மன்னராட்சியில் பிற கட்சிகளுக்கு வேலை கிடையாது.

கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் – அண்ணாமலை

தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்காலத்தில் பெரிய வெற்றி பெறும் என்று அண்ணாமலை கூறினார்.

செங்கோட்டையனுக்கு Y + பாதுகாப்பு - மத்திய அரசு பரிசீலனை !

செங்கோட்டையனுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்க்கு படத்திற்கு பல மொழி வேண்டும், ஆனால், பாடத்திற்கு பல மொழிகள் கூடாதா? - தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

விஜய் போன்றவர்களுக்கு படத்திற்கு பல மொழி வேண்டும், ஆனால், பாடத்திற்கு பல மொழிகள் கூடாதா? என்று கேள்வி எழுப்பியுளார். முதலில் திமுக எதிர்ப்பை நீங்கள் தீவிரப்படுத்த வேண்டும் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். 

முதல்வர் பதவிக்கான ரேஸ்.. EPS-க்கு அதிர்ச்சி அளித்த விஜய்: சி-வோட்டர் கருத்துக் கணிப்பு!

தமிழகத்தில் 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த முதலமைச்சராக யாருக்கு ஆதரவு உள்ளது?  என சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

அம்பேத்கர் சிலை நிறுவுவதில் ஏன் இவ்வளவு முட்டுக்கட்டைகள்? கோரிக்கை வைத்த MP திருமாவளவன்

அம்பேத்கர் சிலை நிறுவுவதில் உள்ள தடைகளை களையவும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு ஓய்வூதியம், அரசு வேலையினை முறையாக வழங்கவும் விசிக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை

தேர்தல் வேட்புமனுவில்  தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.