K U M U D A M   N E W S
Promotional Banner

அரசியல்

ஸ்டாலின் ஆட்சி ‘Simply waste’ – இபிஎஸ் சாடல்

அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என கூறுவதற்கு திருமாவளவன் யார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

“எங்களை பொறுத்தவரை அமித்ஷா சொல்வது தான்” – டிடிவி தினகரன்

தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றிணைத்து அமித்ஷா செயல்பட்டு வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கடலூர் ரயில் விபத்து: மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்

“கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

கூடுதல் தொகுதிகள் கேட்போம்.. வைகோ திட்டவட்டம்

“சட்டமன்ற தேர்தலில் மதிமுக கூடுதலான தொகுதிகளை திமுகவிடம் கோரும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை ராசியான மாவட்டம்.. இபிஎஸ் கோட்டைக்குச் செல்வார்- எஸ்.பி.வேலுமணி

“கோவை ராசியான மாவட்டம் என்பதால், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தை இங்கு இருந்து தொடங்கி இருக்கிறோம்” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

ரயில் மோதி பள்ளி மாணவர்கள் பலி: அரசியல் தலைவர்கள் இரங்கல்

கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து தெரிவித்துள்ளனர்.

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: உரிய இழப்பீடு வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழிசைக்கு அனுமதி, எனக்கு இல்லையா? செல்வப்பெருந்தகை அதிருப்தி

காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்தில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு சலுகை அளித்ததாகவும், தன்னைத் தடுத்ததாகவும் கூறி அதிகாரிகள் மீது செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

100 சதவீத தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்ற முடியாது- திருமாவளவன் ஓபன் டாக்!

“திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாகவும் உறுதியாகவும் உள்ளது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சமூகநீதியை படுகொலை செய்துவிட்டு பரிகாரம் தேடுகிறார் முதல்வர்- அன்புமணி

சமூகநீதியை படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று முதலமைச்சர் கூறுகிறார்” என்று அன்புமணி விமர்சித்துள்ளார்.

அதிமுக எப்போதும் விவசாயிகளுடன் இருக்கும்.. இபிஎஸ் உறுதி

விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தும் தனக்கு தெரியும் என்றும் நாங்கள் எப்போதும் விவசாயிகளுடன், மக்களுடன் இருப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விளம்பர ஆசைக்காக விடுதிகளின் பெயர் மாற்றம்.. அண்ணாமலை விமர்சனம்

“விளம்பர ஆசைக்காக, விடுதிகளின் பெயரை மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன் - சீமான் அறிவிப்பு!

போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியின் ஒரு செங்கலைக்கூட அசைக்க முடியாது- செல்வப்பெருந்தகை பேச்சு

”தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 முதல் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்” என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.

LGBTQ+ குறித்து கருத்து.. வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்..!

“உள்நோக்கம் ஏதுமின்றி நான் கூறிய கருத்துகள் LGBTQ + தோழர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம்.. ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம்- ஜி.கே.வாசன்

“எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுபயணம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அரசு கல்லூரிகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை உயர்வு.. அன்புமணி ராமதாஸ்

“உயர்கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக அதற்கு சவக்குழி தோண்டும் செயல்களில் திமுக அரசு ஈடுபடக் கூடாது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும் ’ஆன்டி நக்சலைட்’ தான்- MP கனிமொழி பேச்சு!

மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களை "ஆன்டி நக்சலைட்டுகள்" என்று பாஜக அரசு அச்சுறுத்துவதாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது - முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றசாட்டு!

தமிழகத்தில் திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதற்கு சிவகங்கையில் மாவட்டத்தில் நடைபெற்ற லாக்கப் மரணமே காரணம் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி குற்றச்சாட்டியுள்ளார்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் அறிவுப்பூர்வமானது.. முதல்வர் ஸ்டாலின்

இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

“பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்ட வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுகவை தோழமையாக விஜய் கருதுவது போல் உள்ளது.. திருமாவளவன்

“திமுக, பாஜக ஆகிய கட்சிகளை எதிர்க்கும் விஜய், அதிமுகவை தோழமை கட்சியாக கருதுவது போல் தெரிகிறது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: அரசியல் சூழ்ச்சியை கண்டுபிடிக்க வேண்டும்- பா.ரஞ்சித்

“ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் இருக்கும் அரசியல் சூழ்ச்சியை கண்டறிய வேண்டும்” என்று இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி.. எஸ்.பி.வேலுமணி

“தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.