தமிழை இழிவுப்படுத்தும் ஒரே கட்சி பாஜக தான்.. முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
தமிழை மதிக்காமல் இழிவுபடுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பாஜக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழை மதிக்காமல் இழிவுபடுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பாஜக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் அவுட் டேட்டடாக இருக்கிறார் அப்டேட்டாக இல்லை என்று மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் கலகக் குரல் எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜகவுடனான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவுடனான கூட்டணிக்கு அண்ணாமலையும் மழுப்பலாக பதில் சொல்லி இருப்பது தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. தாமரையுடன் இணைகிறதா இரட்டை இலை? சிவராத்திரிக்கு பிறகு அடுத்தடுத்து, தலைவர்கள் மனமாற்றத்திற்கு காரணம் என்ன?
Constituency Delimitation : தமிழ்நாடு மற்றும் மாநிலங்களின் தென்னிந்திய அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
All Party Meeting in Tamil Nadu : அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களையும் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக சொல்லவில்லை" அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
"தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக சொல்லவில்லை" அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
கோவையில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமன விழாவில் பாஜக தலைவர்கள் ஒருசேர சங்கமித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமைகிறதா என்று கேள்வி எழும்பியுள்ள நிலையில், அதுகுறித்து விரிவாக இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்..
தமிழக வெற்றி கழகத்தின் நகரச் செயலாளர் ஒருவர் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான ஒரு கொடூரச் செயலை செய்த அந்த நகரச் செயலாளர் யார்? அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
2026 சட்டமன்ற தேர்தலில் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஏற்பட்ட நிலை தான் திமுகவுக்கு ஏற்படப்போகிறது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அப்படி ஆந்திர அரசியல் களத்தில் நடந்தது என்ன? பிரசாந்த் கிஷோர் சொல்லும் கணிப்பு என்ன? விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பாரா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி நிலவரம் குறித்த உண்மையை வெளிப்படையாக பேசியுள்ளார் பிரசாந்த் கிஷோர். அப்படி அவர் சொன்னது என்ன? தவெக அதிமுக உடன் கூட்டணி அமைக்கிறது அல்லது தனித்து போட்டியிடுகிறதா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
த.வெ.க.வின் பூத் கமிட்டி மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி, பெரிய கட்சிகளை மிரளவைக்கப் போவதாக சவால் விட்ட விஜய்யின் கட்சியில், மனைவி, மச்சினிச்சி என கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகிப்புக் குரலை எழுப்பியுள்ள நீலகிரி மாவட்ட நிர்வாகிகளால் பனையூரே ஆட்டம் கண்டுள்ளது... இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தவெக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் முதலில் ஊடகத்தை சந்திக்கட்டும் என்றும் அவர் ஊடகத்தை சந்தித்தால் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயில் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு என முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை பாலியல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக தலைவர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
இந்தி திணிப்பை எப்போதும் ஏற்று கொள்ள மாட்டோம் என்று உதயநிதி கூறுகிறார். இல்லாத திணிப்பை திணிப்பு என்று சொல்கிறார்கள். அரசாங்க பள்ளியில் தான் இவர்களும் இவர்களது குழந்தைகளும் படித்தார்களா? என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ள காளியம்மாள், சிஎஸ்கே கட்சியில் இணைய வந்தால் சிகப்பு கம்பளம் தயாராக இருக்கும் என்று நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தவெக தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள் தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.