வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜர்
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார்.
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார்.
மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மயிலாடுதுறை ஆட்சியர் முற்றிலும் பொறுப்பற்ற முறையில் பதில் கூறியிருக்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மேடையில், ஆதவ் அர்ஜுனா பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. அப்படி ஆதவ் என்ன பேசினார்? அந்த பேச்சால் கிசுகிசுக்கப்படும் விசயம் என்ன....? பார்க்கலாம் இந்த தொகுப்பில்......
யாரெல்லாம் ஊழல் பெருச்சாளிகளோ அவர்களையெல்லாம் திமுக தேடி மெம்பராக சேர்த்து உள்ளது என்றும் இந்த ஊழல்வாதிகளால் தமிழகம் துன்பத்தில் திகைத்து கொண்டு இருக்கிறது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் வெறும் அரசியல் கட்சி அல்ல, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சாதி அரசியல் பேசி தேர்தலில் வெற்றி பெற்று ஊழலை முதற்கண்ணாகவும், கொள்கைகளாகவும் கொண்டுள்ளதாகவும், ஊழல்வாதிகளின் கைகளில் தமிழக அரசியல் இருப்பதை துடைத்தெறிய வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றை எதிர்க்கும் வகையில் தொடங்கப்பட்ட தவெக GETOUT கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பான விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வல்லுநர்கள் கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
தென்காசியில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பெண் தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
NTK Kaliammal Resignation : நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
எடப்பாடி கூறுவது வார்த்தை ஜாலத்திற்கு மட்டுமே ஒத்துவரும் நடைமுறைக்கு ஒத்து வராது என்றும் பிரிந்து கிடக்கக்கூடிய அனைத்து சக்திகளும் இணைந்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னது, பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளதோடு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் Vs தர்மேந்திர பிரதான் என அரசியலாக மாறியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் அரசியல் தலைவர்கள் செய்யும் ஸ்டன்டுகள் டிரெண்டாகிக் கொண்டிருக்கும் நிலையில், மாறி மாறி ஹேஷ்டேக் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர் திமுக மற்றும் பாஜகவினர். இந்த ஹேஷ்டேக் சேலஞ்சிற்கு தொடக்கப்புள்ளி எது? இதில் சறுக்கியது யார்? சாதித்தது யார்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சி மோதல் காரணமாக, மாஜிக்கள் சிலர் தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸில் செங்கோட்டையன் தலைமையில் ரகசிய மீட்டிங் நடந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிமுக தலைமையை ஏகத்துக்கும் டென்ஷனாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னது, பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளதோடு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் Vs தர்மேந்திர பிரதான் என அரசியலாக மாறியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு திமுக உட்கட்சி விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், பிரஸ் மீட்டிலேயே தோப்பு வெங்கடாசலம் மீது அமைச்சர் முத்துச்சாமி, எரிச்சலைக் கொட்டியது பேசு பொருளாக மாறியுள்ளது. ஈரோடு திமுகவில் நடப்பது? அமைச்சரின் மனநிலை என்ன? தோப்பு வெங்கடாசலம் இதனை எப்படி சமாளிக்கப் போகிறார்? என்பன குறித்து விரிவாக பார்ப்போம்.
தமிழக வெற்றிக் கழகமானது கூட்டணிக்கான படலத்தை தொடங்கிவிட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் திராவிட கட்சிகளை திக்குமுக்காட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தவெக உடன் கூட்டணியை உறுதி செய்த முதல் கட்சி எது? அடுத்தடுத்து இணையப்போகும் கட்சிகள் என்னென்ன? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.
கட்சியை வலுப்படுத்துவதற்காக புதுப் புது மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறது அறிவாலயம். இந்த பட்டியலில், அமைச்சர் பிடிஆரின் பெயர் இடம்பெறவில்லை. மதுரை திமுகவில் இரண்டு முக்கிய புள்ளிகள் வேட்டு வைத்ததே இதற்கு காரணம் என்கிறனர் சில விவரப்புள்ளிகள். அந்த முக்கிய புள்ளிகள் யார்? மதுரை திமுகவில் நடக்கும் பிரச்சனை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
திமுகவில் திடீரென நிகழ்ந்த மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்தால் கடும் அப்செட்டில் உள்ளதாகக் கூறப்படும் அமைச்சர் பொன்முடி எடுத்துள்ள முடிவு மாண்புமிகுகளை பதறவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி பொன்முடி எடுத்த முடிவு என்ன?விரிவாக பார்ப்போம்.
அதிரடியாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனங்களை திமுக செய்துவரும் நிலையில், தலைநகரை டார்கெட்டாக வைத்து சில அதிரடி மாற்றங்கள் நிகழ உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திரா, தெலங்கானா, நாகலாந்து, ஒடிசா, திரிபுரா மாநிலங்களுக்கு ஆயிரத்து 554 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது தவறு செய்தது ஆண்டவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறோம் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்.. தமிழ்.. என்று 60 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் எதையும் செய்யவில்லை என்றும் தமிழகத்தில் 20 அரசு பல்கலைக்கழகங்கள் இயங்கி வரும் நிலையில் ஒன்றில் கூட பாரதியார் இருக்கை இல்லை என்றும் ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.