அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா- அதிமுகவினர் ஷாக்!
அதிமுகவின் அமைப்புச்செயலாளராக பதவி வகித்து வந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் அமைப்புச்செயலாளராக பதவி வகித்து வந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
“கள் உள்ளிட்ட மது போதை பொருட்களுக்கு ஆதரவு தரும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை தடை செய்தால்தான் மக்கள் மத்தியில் போதைப்பழக்கம் இல்லாமல் போகும்” என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“திமுக பாடி போன லாரி, டயர் போன பேருந்து. இதனால் அந்த வண்டி ஓட வாய்ப்பு இல்லை” என்று முன்னாள் மைச்சார் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளளார்.
“பொய்யையே கருத்தாக கொண்டிருப்பவர்களுக்கு புனித தளத்தில் அவர்களது பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.
“அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷா - இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு ஒரு ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது என்று சீமான் விமர்சித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று எழும் குற்றச்சாட்டுகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பதோடு, அவ்வாறு குற்றம் சாட்டியவர்களையே திமுக அரசு பணிநீக்கம் செய்வது கடும் கண்டனத்திற்குரியது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியதாக, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீதிமன்ற தீர்ப்புகள் குடிசைகளை குறிவைக்கப்படும் நிலையில், மக்களின் குடியிருப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்களின் வீடுகளையும், காடுகளையும் அழித்து விட்டு தான் தொழிற்சாலை அமைக்க வேண்டுமா ? என்று கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், தொழிலதிபர்களின் முகவராக திமுக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட கண்டுகொள்ளாது, மேடைகளில் மட்டும் "நானும் டெல்டாக்காரன் தான்" என்று முழங்கும் விளம்பர மாடல் ஆட்சி என நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் திமுகவினர் துணிந்துவிட்டனரா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக கூட்டணி வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
“கமிஷன், கலெக்சன் மட்டும்தான் திமுகவின் தாரக மந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பதவியேற்கவுள்ள நிலையில், சகோதரத்துவம் போற்றும் சகலகலாவல்லவன் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி உருட்டி நடிகர் விஜய் கட்சி தொடங்க வைத்துத் திமுகவுக்கு எதிராகப் பாஜக களம் இறக்கிவிட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் கிட்னியும் திருடுவார்கள், எல்லாவற்றையும் திருடுவார்கள் என நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளியை ஏமாற்றி கிட்னி திருடிய சம்பவம் குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபொழுது ஆட்சிக்கு வந்தால் நாங்கள் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் முதலமைச்சர் எனக் கூறிய முதலமைச்சர் தான் ஆசிரியர்களின் முதல் எதிரி என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
விசிக அதிமுக கூட்டணியில் இணைந்து பயணித்தது தான் என முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்
ஆட்சியை இழந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது என நயினார் நாகேந்திரன் பேட்டி
நோய்களைக் குணப்படுத்த வேண்டிய அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் 25ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பதவியேற்க உள்ள நிலையில், ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் ஆக.25ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மதுரையில் மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தில் இன்று பூமி பூஜை ஆரவாரமாக நடைபெற்றது.
வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டி, ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்” என்று தொண்டர்களுக்கு அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.