K U M U D A M   N E W S
Promotional Banner

அரசியல்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழப்பு: சசிகலா- அண்ணாமலை இரங்கல்

திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ குணசேகரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவினைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சசிகலா ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

திமுக அரசு இன்னும் திருந்தவில்லை.. இபிஎஸ் காட்டம்

நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தவறாமல் படத்தை பாருங்க.. பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்

சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள 'படைத்தலைவன்' படத்தில் விஜயகாந்தை AI தொழில்நுட்பத்தில் நடிக்க வைத்திருப்பதாகவும் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.

2026ல் திமுகவை வீட்டிற்கு அனுப்புவதே குறிக்கோள் – அண்ணாமலை

4 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழக மக்கள் நிம்மதியாக இல்லை என அண்ணாமலை தெரிவித்தார்.

திமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள்.. அமித்ஷா ஆவேசம்

2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றும் திமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் பேசினார்.

பாகுபலி பாணியில் அதிர்ந்த அரங்கம்.. அண்ணாமலைக்கு ஆரவாரம்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெயரை கூறியபோது அமைதியாக இருந்த நிர்வாகிகள், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரை கூறியபோது, கட்சி துண்டுகளை சுற்றியபடி ஆரவாரம் எழுப்பிய சம்பவம் பேசுபொருளானது.

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் சிறு குறு வியாபாரிகளுக்கு பாதிப்பு.. ராஜேந்திரன் பேட்டி

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டு வந்தால் இது சிறு குறு தொழிலை பாதிக்கும் எனவும் மத்திய அரசின் நிர்பந்தத்தால் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக சிஐடியு மாநில செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

“கன்னட மொழி விரோதி கமல்ஹாசன்” –கோவையில் போஸ்டர் ஒட்டிய பாஜக

தமிழ் எங்கள் உயிர், கன்னடம் எங்கள் தாய்மொழி; கன்னட மொழி விரோதி கமல்ஹாசன் என கோவையில் பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜகவுடன் கூட்டணியால் அதிமுக பலவீனப்படும்.. திருமாவளவன் எச்சரிக்கை

2026 தேர்தலுக்கு பின் அதிமுக பலவீனம் அடைந்து பாஜக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதனை அதிமுகவினர் உணரவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

இந்தியாவின் பெருமை இளையராஜா.. அண்ணாமலை புகழாரம்

நான் சார்ந்திருக்கும் பிரதமர் மோடி முதல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இந்நாள் முதலமைச்சர் ஸ்டாலின் அவரை அனைத்துக் கட்சித் தலைவர்களும் விரும்பும் ஒரு மனிதராக இளையராஜா இருப்பதாக அண்ணாமலை புகழாரம் சூட்டினார்.

42 நாட்கள்... 38 மாவட்டங்கள்..! சூறாவளி சுற்றுப்பயணத்திற்கு ரெடியான விஜய்..! தவெகவினருக்கு பறந்த முக்கிய உத்தரவு..!

கோயம்புத்தூரில் பூத் கமிட்டி கூட்டம்… அதே கையோடு 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு… ஜனநாயகன் ஷூட்டிங் என அடுத்தடுத்து படு பிசியாக இருந்த விஜய், தற்போது சுற்றுப் பயணத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் அதற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

EPSக்கு டஃப் கொடுக்கப்போகும் முக்கியப்புள்ளி..? ஸ்கெட்ச் போட்ட திமுக தலைமை..! முறியடிக்குமா அதிமுக?

சேலத்தில் எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அதிமுக முக்கியப் புள்ளியை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாம் திமுக தலைமை. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே பிளான் போடத் தொடங்கியுள்ள திமுகவின் யுக்தி பலனளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முருகன் மாநாடு: திமுகவினர் மீது மக்களுக்கு சந்தேகம் - தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்

திமுகவினர் முருகன் மாநாடு நடத்தும் பொழுது தான் மக்களுக்கு சந்தேகம் வருகிறது என்று சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

4 கார்.. 35 ஏக்கர் விவசாய நிலம்.. 50 கோடி கடன்: கமலின் சொத்துப் பட்டியல் முழுவிவரம்

மாநிலங்களவை தேர்தலுக்கு கமல்ஹாசன் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அவரின் சொத்துமதிப்பு விவரங்கள் இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது. அவர் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு விவரங்களை இப்பகுதியில் காணலாம்.

திமுக தோல்வி பயத்தில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ் என நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் மயங்கி விட மாட்டார்கள்- திருமாவளவன்

பாஜகவின் மதவாத அரசியலுக்கு பிற மாநில மக்கள் மயங்கி விடுவதுபோல், தமிழக மக்களும், முருக கடவுளும் மயங்கி விடமாட்டார்கள் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து

அரசியல் அறிவே இல்ல.. தவெக போஸ்டரால் டென்ஷனாகிய MP கார்த்தி சிதம்பரம்

விஜயும்-காமராஜரும் இணைந்த ஒரு போஸ்டரை தவெக ஆதரவு ஐடி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு காட்டமாக பதிலளித்துள்ளார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.

அவர் பேசியதில் தவறில்லை.. கமலுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

கமல்ஹாசன் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை எனவும் படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

பூச்சாண்டி கதையை அவிழ்த்து விடும் முதல்வர்.. எல்.முருகன் விமர்சனம்

தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சித்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

"புலி வருது, புலி வருது".. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்

தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்றும் மடைமாற்றும் அரசியலை மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பக்ரீத் பண்டிகை.. முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.

விஜய் இனிமேல் பதில் சொல்வார்.. கூட்டணி குறித்து நயினார் சூசகம்

விஜய் கூட்டணியில் இணைய வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதற்கு இனிமேல் தான் பதில் வரும் என நினைக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பாஞ்சாலங்குறிச்சியில் துரை வைகோ கெத்து.. செண்டிமெண்ட் சிக்கலில் மதிமுக?

கட்டபொம்மன் கோட்டைக்குப் போனால் பதவிக்கு ஆபத்து என்கிற சென்டிமென்டை உடைத்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து கெத்து காட்டிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருப்பது தான் பாஞ்சாலங்குறிச்சியின் பஞ்சாயத்தாக உள்ளது.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக-திமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல்!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில், திமுக வேட்பாளர்களும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள என்று தகவல் வெளியாகியுள்ளது.