பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள நிலையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள நிலையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
விஜய் இந்தியா கூட்டணியுடன் வருவது தான் அவருக்கும் நல்லது, அவரது கொள்கை கோட்பாடுகளுக்கும் நல்லது, எல்லோருக்கும் நல்லது என்பதைத்தான் ஒரு இந்திய பிரஜையாக எதார்த்தமாக நான் சொல்ல முடியும் என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் நாட்டுக்கு நல்லது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் புகழை யாராலும் அசைக்க முடியாது என டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது.
‘கோபால் என்னை போல தைரியமான ஆளா… பயந்தவன் தானே. விரட்டி விரட்டி வெட்டினது எல்லாம் ஞாபகத்துக்கு வந்து போகும் இல்லையா’ என வடிவேலுவின் சூனாபானா கேரக்டர்தான் பழனிசாமி என்று அமைச்சர் எ.வ.வேலு கடுமையாக விமர்சித்துள்ளார்.
நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. கல்வி தொடர்பான அதிகாரம் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான பட்டியலில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அரசியல் செய்துவிட்டு தற்போது தங்களால் ரத்து செய்ய முடியாது என கையை விரிக்கும் தமிழக அரசு மக்களை ஏமாற்றுவதாக தவெக தலைவர் விஜய் எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்ற அதிமுகவின் கேள்விக்கு ‘இவன் தான் அந்த சார்’ என்று திமுக உறுப்பினர்கள் பதிலளித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் 'யாருக்கோ ஏஜெண்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள்' என்று சீமானை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் காரை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இது மட்டுமில்லாமல், அவரது உருவப்படத்தை செருப்பால் அடிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியிருந்தது திமுகவுடனான கூட்டணியில் புகைச்சலை கிளப்பியது. இந்நிலையில், அக்கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து கே.பாலகிருஷ்ணனை மாற்றி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மார்ச் மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசியலில் சிறிதும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. திமுகவில் பிரமோஷன், அதிமுகவில் எமோஷன், விஜய்யின் Explosion என பரபரப்பாகவே சென்றது 2024. அப்படி கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசியலில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை பின்னோக்கி பார்க்கலாம்...
மக்களின் சுமையை குறைக்கும் வகையில் உயர்த்தப்பட்ட தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மோடி 3.0, உயிர்பெற்ற எதிர்க்கட்சிகள், அதிகரித்த வாரிசுகள், எதிர்பாரா தேர்தல் தோல்விகள் என அரசியல் களத்தில் பல டிவிஸ்ட் & டர்ன்ஸ் நிகழ்வுகள் அரங்கேறிய ஆண்டாக 2024 இருந்தது... அப்படி 2024ல் அரங்கேறிய முக்கிய அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பை காணலாம்..!
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் பிறரைத் துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் அவரது சேடிஸ்ட் மனநிலையையை காட்டுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
தவெக மாநாட்டில் ஆளுநரே தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தவெக தலைவர் விஜய் மனு அளித்துள்ளார். இது தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதியில் போட்டியிட்டு 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது மேடைக்கு மேடை திமுகவினரின் பேச்சாக இருக்கிறது. முதலமைச்சர் முதல் திமுக அமைச்சர்கள் வரை யார் பேட்டி கொடுத்தாலும் திமுக 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது உறுதிய சூளுரைத்து வருகின்றனர். அப்படியெனில் மீதமுள்ள 34 தொகுதிகளை தான் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கப்போகிறதா? அல்லது கூட்டணி கட்சிகளை கழற்றிவிடப் போகிறதா? என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சென்னை கீழ்பாக்கத்தில் கிறுஸ்துமஸ் விழாவில் இபிஎஸ் கலந்துக்கொண்ட அதே நாளில், தானும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடப்போகிறேன் என்று கூறி முதியோர் காப்பகத்தில் பரோட்டா சால்னா வழங்கி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி முடித்துள்ளார் ஓ.பி.எஸ். இருவரும் நடத்தி முடித்த நிகழ்ச்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. என்ன நடந்தது பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
தந்தை பெரியார் நினைவு தினத்தையொட்டி பல கட்சி தலைவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பெரியார் குறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அரியலூரில் பெண்களுக்கு மரியாதை இல்லை எனக்கூறி டிசம்பர் 22ம் தேதி கட்சியில் இருந்து விலகுவதாக கூறிய பெண் நிர்வாகி, இன்று மீண்டும் கட்சி கொடியை ஏற்றும் விழாவில் பங்கெற்றுள்ளார். தவெக கட்சிக்கு ஒரு கும்பிடு எனக்கூறிவிட்டு, நான் அப்படி சொல்லவே இல்லையே என அப்பெண் நிர்வாகி மாற்றி கூறியுள்ள அந்தர்பல்டி சம்பவத்தை விலக்குகிறது இந்த தொகுப்பு...
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ’காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டுகிறார்’ என்று திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களை பாஜக அரசு வஞ்சிப்பதாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த சர்ச்சை கருத்திற்கு தமிழக கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.