K U M U D A M   N E W S
Promotional Banner

அரசியல்

பெண்கள் ஆதரவை குறைக்கவே விஜய் திமுக அரசை விமர்சிக்கிறார் - அமைச்சர் ரகுபதி

திமுகவிற்கு பெண்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை குறைக்கவே திமுக அரசை பா.ஜ.க C- டீமான விஜய் குறை கூறுகிறார் என்று திருச்சியில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை - பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க-விற்கு ஏற்கனவே 2 முறை எம்.பி. பதவி வந்த போது அன்புமணிக்கும், ஜி.கே.வாசனுக்கும் கொடுத்தார்கள். தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. இ.பி.எஸ் சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அய்யா குலதெய்வம்.. அன்புமணி எதிர்க்காலம்: பதவி விலகிய முகுந்தன்

பாமக நிறுவனர் ராமதாஸின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறைவதற்குள் பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அன்புமணியின் எமோஷனல் பிளாக்மெயில்.. கண்ணீர் சிந்திய ராமதாஸ்

கடந்த மே 16 ஆம் தேதி கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்த போதே, நான் செத்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்ற வரலாற்றை மாற்ற முடியாது – திருமாவளவன் கருத்து

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது, வரவேற்கத்தக்கது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

என் டாஸ்க் இனி இது தான்.. நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்

”ED மீது பயம் இல்லாதவர் தனது நண்பர்களை ஏன் லண்டனுக்கு அனுப்ப வேண்டும்?” என உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசன் என்னும் நான்.. நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகும் உலகநாயகன் குரல்!

நடைப்பெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டிய சீமான்- தவெக தொண்டர்கள் வரவேற்பு

’தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆடை கிழிப்பது.. பூட்ஸ் காலால் உதைப்பது.. இது மக்களாட்சியா? விஜய் கண்டனம்

’தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே’ என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திமுக தலைமையிலான அரசை கடுமையாக சாடியுள்ளார்.

நடிகர்கள் வேடம் போடலாம்.. முதல்வர் அப்படியில்லை: சபாநாயகர் அப்பாவு பேட்டி

’பவன் கல்யாண் நடிகர், அவர் வேடம் போடலாம். தமிழக முதலமைச்சர் வேடம் போடுவதும் கிடையாது, நடிப்பதும் கிடையாது’ என சபாநாயகர் அப்பாவு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கோபமடைந்த எம்எல்ஏ- ஸ்டிக்கர் மூலம் சமாதானப்படுத்திய அதிகாரிகள்

குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார். இதனையடுத்து கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.

ஒரே நாடு ஒரே தேர்தல்.. எதிர்கட்சிகள் இரட்டை வேடம் - பவன்கல்யாண் கருத்து

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கருணாநிதியின் கனவாக இருந்ததாகவும், தற்போது எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் இரட்டைவேடம் போடுவதாகவும் தெலங்கானா துணை முதல்வர் பவன்கல்யாண் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடம்.. தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதலமைச்சரை விமர்சிப்பது அரசியல் உள்நோக்கமுடையது - திருமாவளவன்

நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம் என திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்தவர் இபிஎஸ்.. முதலமைச்சர் விமர்சனம்

நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்காதது அடையாள போராட்டம் - திருமாவளவன்

நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஐ.ஆர்.எஸ் To அரசியல்: தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கப்போகிறாரா அருண்ராஜ்!

மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

கோவையில் எய்ம்ஸ்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் வைத்த கோரிக்கை பட்டியல்

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்ற நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

ரிசர்வ் வங்கிக்கு இது தெரியாதா? தவெக தலைவர் விஜய் அறிக்கை

ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அடிமை கட்சியா நாங்க? ED குறித்து துணை முதல்வர் உதயநிதி பேட்டி

புதுக்கோட்டையில் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற உதயநிதி, பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ED-க்கு மட்டுமல்ல.. மோடிக்கும் பயப்பட மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

தூக்கமில்லை..மன உளைச்சல்.. மனமுடைந்து பேசிய அன்புமணி ராமதாஸ்

”என்னைப் பொறுத்தவரை நான் என்ன தப்பு பண்ணேனு எனக்கு தெரியல. எதனால் என்னை பதவியிலிருந்து நீக்கினார்கள்” என அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் மனமுடைந்து பேசியுள்ளார்.

நெருப்பில்லாமல் புகையாதே.. விஜய்யின் தவெகவில் அருண்ராஜ் இணைகிறாரா?

தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் ஆலோசனைகளை அருண் ராஜ் IRS வழங்கி வருகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவரது விருப்ப ஓய்வு முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் தவெகவில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்கிற பேச்சு எழுந்துள்ளது.

கீழடி அகழாய்வுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக? MP சு.வெங்கடேசன் சரமாரி கேள்வி

“தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்” என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது என MP சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

நண்பா நண்பீஷ் ரெடியா இருங்க.. திமுகவில் இணைந்த தவெக பிரபலம் வைஷ்ணவி

கட்சி பணிகளில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி தவெகவிலிருந்து வெளியேறிய வைஷ்ணவி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

கூட்டணியிலிருந்து வெளியே வாங்க திருமா.. விருப்பத்தை தெரிவித்த நயினார்

”அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்; திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என்றும் நான் விருப்பப்படுகிறேன்“ என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.