K U M U D A M   N E W S

அரசியல்

பிரிந்து சென்றவர்களை 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும்.. இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கெடு!

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் உங்கள் முன் நிற்கிறேன்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

"பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செல்லும்.. இபிஎஸ்-க்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? அடித்து விரட்டுவதற்கா?’- அன்புமணி கண்டனம்!

“உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? அல்லது அடித்து, உதைத்து விரட்டுவதற்கா?” என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

16 குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க அன்புமணிக்கு கெடு.. ராமதாஸ் மீண்டும் எச்சரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் அதிகார மோதல், கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அன்புமணி மீது சுமத்தப்பட்டுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்குச் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் மீண்டும் கெடு விதித்துள்ளார்.

அமித்ஷா தலைமையில் டெல்லியில் பாஜக கூட்டம்: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இன்று (செப்டம்பர் 3 ) ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஒவ்வொரு உயிர்பலிக்கும் ஏதோ ஒரு கதை சொல்கிறார்கள்.. அண்ணாமலை குற்றச்சாட்டு!

“மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் செயல்- முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

முதலமைச்சர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணம் ஒரு "மோசடிப் பயணம்" மற்றும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

'சம்பாதித்ததை காப்போம் சம்பந்தியை மீட்போம்'- இபிஎஸ்-ஐ கிண்டலடித்த அமைச்சர் சேகர்பாபு!

'தமிழகத்தை மீட்போம் மக்களைக் காப்போம்' என்பதற்குப் பதிலாக 'சம்பாதித்ததை காப்போம் சம்பந்தியை மீட்போம்' என்று எடுத்துக்கொள்ளலாம்" என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகலா? செப்.5 மனம் திறக்கிறேன்- செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

"வரும் 5 ஆமா தேதி செய்தியாளர்களை சன்னதிது மனம் திறந்து பேசவுள்ளேன்" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் ஜெர்மனி பயணம் குறித்து பாஜக விமர்சனம்.. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி!

தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் போக்கைக் கைவிட்டு, உண்மைத் தரவுகளை நயினார் நாகேந்திரன் அறிய முயற்சிக்க வேண்டும்” என்று அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

கல்வி நிதி மறுப்பு.. உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் எம்பி சசிகாந்த் செந்தில்!

தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு உடனே வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்டார்.

தமிழகத்தில் வாக்கு திருட்டு முயற்சி: மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - திருமாவளவன் எச்சரிக்கை!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வாக்கு திருட்டு முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

‘முதல்வருக்கும் எனக்கும் சண்டை..’ வேல்முருகன் பரபரப்பு பேச்சு!

“முதல்வருக்கும் எனக்கும், அவரது அமைச்சர்களுக்கும் எனக்கும் சண்டை இப்படித்தான் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது” வேல்முருகன் கூறினார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி- கிருஷ்ணசாமி பேட்டி

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றும் அந்த வரலாற்று மாற்றத்திற்கான அச்சாணியாகப் புதிய தமிழகம் கட்சி விளங்கும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் - அதிமுக வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - சசிகலா உருக்கமான கடிதம்!

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா கோரிக்கையும், கட்சி பிளவுபட்டால் திமுக குளிர் காயும் என தொண்டர்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

2026-ல் தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் - நிர்மலா சீதாராமன் பேச்சு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

விநாயகரை ஆற்றில் கரைப்போம்.. ஆனால் மனுக்களைக் கரைக்கின்றனர்- தமிழிசை பேட்டி!

“விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதுபோல், மக்களின் மனுக்களைக் ஆற்றில் கரைக்கின்றனர்” என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

அஸ்தியை போல் கரைக்கப்பட்ட மனுக்கள்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மனுக்கள் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் கொட்டப்பட்டிருந்த சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய் குறித்த கேள்விக்கு இனி பதில் இல்லை- பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி மற்றும் விஜய் குறித்த கேள்விகளுக்கு இனி பதிலளிக்கப்போவதில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியின் பொய் பிரச்சாரம், அது தமிழகத்தில் எடுபடாது - அமைச்சர் கோவி. செழியன்

அதிமுக ஆட்சியில் உயர் கல்வியில் தமிழகம் சிறந்தது என்று'எடப்பாடி பழனிச்சாமி செய்யும் பொய் பிரச்சாரம் தமிழகத்தில் எடுபடாது' என்று தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.

விஜயகாந்த் போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்- டிடிவி தினகரன் பேட்டி!

“2006 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியது போல, 2026 தேர்தலில் விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பீகார் பயணம் முதல்வர் ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்- அன்புமணி ராமதாஸ்

“பீகார் பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

‘பாஜகவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது’- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

வாக்காளர் அதிகார யாத்திரையில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், “பீகாரில் பாஜகவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது” என்று அவர் கூறினார்.

மதுரை மாநாட்டில் தொண்டரை தூக்கி எறிந்த பவுன்சர்கள்.. விஜய் மீது வழக்கு பதிவு!

தவெக மாநாட்டில் ரேம்ப் வாக் மேடையில் ஏற முயன்ற தொண்டரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய் மீது முதல் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.