K U M U D A M   N E W S

தமிழ்நாடு

“டேய் வெட்டி போட்டுருவேன்..” எகிறிய காங். பிரமுகர் மகன் போக்குவரத்து ஊழியர்கள் படுகாயம்!

காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன், அரசுப் பேருந்தில் செய்த ரகளையால், போக்குவரத்து ஊழியர்கள் 4பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்பதிவு செய்யாமல் அரசுப் பேருந்தில் ஏறி சீட் கேட்டது தான் இந்த ரணகளத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

’வெளிய சொன்னா கொன்னுடுவேன்’ மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்? பணத்தை இழந்த அப்பாவி பெண்

“நெஞ்சே நெஞ்சே நீ எங்கே” என அயன் பட சூர்யா ஸ்டைலில் ரீல்ஸ் போட்டு, திருமணமான பெண்ணுக்கு காதல் தூதுவிட்ட ரியல் எஸ்டேட் அதிபர், ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

வரம்பு மீறிய வாத்தி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் கைதான ஆசிரியர்!

அரசுப் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

Manju Virattu : தைப்பூசத்தை திருவிழாவை முன்னிட்டு சின்ன குன்றக்குடியில் மஞ்சுவிரட்டு..!

Manju Virattu in Chinna Kundrakudi : காரைக்குடி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 165 மாடுகளில் 13 மாடுகள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், மஞ்சு விரட்டு போட்டியில் 152 மாடுகள் மட்டுமே வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. 

திருவண்ணாமலை: சிவாச்சாரியாரிடம் புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேட்டதால், கோயில் குருக்கள் தர்ணா..!

Tiruvannamalai Protest : அருணாசலேஸ்வரர் கோவிலின் தலைமை சிவாச்சாரியாரும் இளவரசு பட்டம் பெற்ற P.T.ரமேஷ் குருக்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ரயில்வே தண்டவாளத்தில் ஆண் மற்றும் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை..!

சென்னை அருகே பெருங்களத்தூர்- வண்டலூர் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் மற்றும் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் கற்றல் நிலை குறித்து அரசு சார்பில் கணக்கெடுப்பு.. அன்பில் மகேஸ் தகவல்

தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை எடுத்துக் கூறும் வகையில் 10 லட்சம் மாணவர்களிடம் அரசு சார்பில் புள்ளி விவரங்கள் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Flights Delay in Chennai : அதிகப்படியான பனிப்பொழிவு.. விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி

Flights Delay in Chennai : சென்னையில் அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாக 14 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Chennai School Boy : 9-ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆசியரை கைது செய்த போலீசார்

Chennai School Boy Harassment Case : சென்னை அசோக் நகர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோ சட்டப்பிரிவில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொருக்குப்பேட்டை ராஜன் ஆர்.கே.நகர் ஸ்டேஷனில் தீக்குளிப்பு..!

தமிழகத்தில் காவல்நிலைய வாசலில் நடக்கும் தீக்குளிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களால் காவல்துறையினரே கதிகலங்கி போயிருக்கும் நிலையில், இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

“ஏசி ஓடுது டாக்டர் இல்ல” டென்ஷனான கஞ்சா கருப்பு! அரசு மருத்துவமனையில் போராட்டம்

சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் இல்லாததால், நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊருக்குள் புகுந்த மான்.. பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..!

பெரம்பலூர் அருகே ஊருக்குள் புகுந்த மானை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கிடைக்காவிட்டால் மனு அளிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கிடைத்திருக்காவிட்டால், அரசிடம் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உட்கட்சி விவகாரம்.. அதிமுக வழக்கில் நாளை தீர்ப்பு

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனுக்கள் மீது நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

தஞ்சாவூர் மாணவி உயிரிழப்பு - ரூ.5 கோடி இழப்பீடு?

தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தல்

அமைச்சர் vs தளபதி.. மதுரை திமுக நிலவரம்..ஒரே கலவரம்! கொந்தளிக்கும் தலைமை!

மதுரையில் அமைச்சர் பிடிஆர் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தை மாவட்ட செயலாளர் கோ.தளபதி புறக்கணித்துள்ள சம்பவம் மதுரை திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சருக்கும், எம்.எல்.ஏவுக்கும் பனிப்போர் நீடிப்பது ஏன்? மதுரை திமுகவின் நிலவரம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

பல்ஸை எகிறவைக்கும் பஸ்கள்! விலையில்லா மகளிர் பயணத்திற்கு உலை?

காலாவதியான பேருந்துகள் காலநீட்டிப்பு தேதியையும் தாண்டி இயங்கிக் கொண்டிருப்பதால் மக்களின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து இருப்பதாக அலறுகின்றன தொழிற்சங்கள் இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

Poonamalle Plot Issue : ஜப்திக்கு வந்த வீடுகள் குத்தகைக்கு விட்டு மோசடி நாயை ஏவி துரத்திய மருத்துவர்!

Poonamalle Plot Issue : பணியில் ஜப்தி-ஆகவுள்ள வீடுகளை, 17 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு மோசடியில் ஈடுபட்ட மருத்துவர், பணத்தை திருப்பிக் கேட்டு சென்றவர்கள் மீது, நாயை ஏவி விரட்டியும் அராஜகம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசி டிக்கெட் தானே..? பெண்களை விரட்டிய இளைஞர்கள் அரசுப் பேருந்தில் நடந்த அவலம்!

“ஓசி டிக்கெட் தானே, உங்களுக்கு எதுக்கு சீட்டு” என அரசுப் பேருந்தில், பெண்களை எழுப்பிவிட்ட இளைஞர்கள், அவர்களை ஆபாசமாகவும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவின் பின்னணி என்ன..? இப்போது பார்க்கலாம்....

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டம்..!

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை அரசாங்கம் பெறும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்  ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

கலாஷேத்ரா நடனப் பள்ளி பாலியல்  வழக்கின் விசாரணை துவங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல்  வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் துவங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Mudra Scheme : முத்ரா திட்டத்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

RN Ravi About Mudra Scheme : மத்திய அரசின் முத்ரா கடன் உதவி திட்டத்தால் தமிழக மக்கள் அடைகின்ற வளர்ச்சியை சுட்டிக்காட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி முத்ரா திட்டத்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தமிழக ஆளுநர் வடகிழக்கு மாநில மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளதால் நகைப்பிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Valentines Day 2025 : காதலில் சொதப்பாமல் இருக்க டிப்ஸ்.. Valentine's day கிப்ட்ஸ்

Valentines Day 2025 Special Gifts : உலகமே அன்பாலும், காதலாலும் நிரம்பி வழியும் ஒரு தினம் தான் காதலர் தினம். இந்த காதலர் தினத்திற்கு உங்கள் மனம் விரும்பியவர்களுக்கு வழக்கம்போல ரோஜா பூ, டெட்டி பியர், போன்ற பரிசுகள் இல்லாமல் தனித்துவமான பொருட்களை பரிசளிக்க எண்ணுகிறீர்களா? இந்த தொகுப்பு உங்களுக்காகத்தான்.

Murder Case : தகாத வார்த்தையால் திட்டியதால் காதலி தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்

Chennai Murder Case : சென்னையில் தகாத வார்த்தையால் திட்டிய காதலியின் தாயை கழுத்தை நெரித்து காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.