கடந்த 4.5 ஆண்டுகளில், தி.மு.க.வின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 செயல்பாட்டிலும், 40 பரிசீலனையிலும் உள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே பட்டா நிலத்தில் பொதுமக்கள் செல்ல பாதை விடக்கோரி நிதியமைச்சர் உதவியாளர் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டுவதாக விவசாயி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது மத்திய அமைச்சருக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
நாட்டின் முப்படை தளபதிகள் வீரர்கள் ஆகியோர் உயிரை பணயம் வைத்து ஆபரேஷன் சிந்தூரை நடத்திக் காண்பித்துள்ள நிலையில் மதுரை தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படையை பாராட்டி ஒரு தீர்மானமாவது நிறைவேற்றி இருக்கலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநரமான தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வை நான்கு திசைகளிலும் இருந்து ஆபத்துகள் சூழ்ந்துள்ள நிலையில் அதை சமாளிக்க ஏழு பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார் ஸ்டாலின், தமிழகத்தை ஏழு மண்டலங்களாக பிரித்து ஏழு பேரின் கைகளில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதே தொண்டர்களின் கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கோரிக்கையில் உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் பல மொழி புலவராகி, பழமொழி பேசிக்கொண்டிருக்கிறார்.இதை பார்க்கும் போது மாநிலத்தலைவராக இருந்து தேசிய தலைவராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,745 க்கும், சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,560 க்கு விற்பனையாகும் நிலையில், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கத்தில் விலை இரண்டு முறை உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்து மீண்டும் தங்கம் வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290 க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் மதிப்புள்ள தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.68,500-ஐ நெருங்கியது.