K U M U D A M   N E W S

#BREAKING: வேலைநிறுத்த போராட்டம் '100 மில்லியன் டாலர் இழப்பு’ - சாம்சங் நிறுவனம்

தொழிலாளர்கள் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் அப்பாவு வழக்கில் புதிய திருப்பம்.... உயர்நீதிமன்றம் உத்தரவு!

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

நீதிமன்றத்துக்கே சவால் விடும் நித்யானந்தா - நீதிபதி காட்டம்

நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ள நிலையில், தலைமறைவாய் இருந்து கொண்டு நிதித்துறைக்கு சவால் விடுகிறார் என உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடை..? நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

4 பல்கலை. மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

குரூப் 1 தேர்வில் தமிழ்வழி கல்வியில் பயின்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அண்ணாமலை பல்கலை., உள்பட 4 பல்கலைக் கழகங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.

சின்ன விஷயத்திற்கு வழக்கு போடுறீங்க.. உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ன?.. நீதிபதிகள் காட்டம்

சிறிய குற்றங்களுக்காக, கடைநிலை ஊழியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலையில், உயர் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: விறுவிறு பிரசாரம்..

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.

#JUSTIN || தீட்சிதர் சஸ்பெண்ட்; சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

"சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் அறநிலையத்துறை எப்படி தலையிட முடியும்?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஜாமின் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'நான் சொன்னால் சொன்னது தான்.. மன்னிப்பு கேட்க முடியாது' - உதயநிதி அதிரடி

நான் சொன்னால் சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உணவின் தரம் குறித்து புகார்... தனிமை சிறையில் அடைக்கப்பட்ட கைதி..? நீதிமன்றம் அதிரடி உததர்வு

புழல் சிறையில் உணவின் தரம் குறித்து புகார் அளித்ததற்காக விசாரணை கைதி தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து சிறை நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்கள் அல்ல - நீதிபதி ஆவேசம்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது. மன கஷ்டங்களுக்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவமானப்படுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. அஞ்சலை மீதான குண்டர் சட்டம்.. காவல்துறை பதிலளிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை-யை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“கடவுளை விட மேலானவர்கள் என நினைக்கக் கூடாது..” கோயில் தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் அட்வைஸ்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள், கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

ரஜினிகாந்துக்கு 70 வயசா!.. வாயை பிளந்த ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு 70 வயதா என கேட்டு ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமடைந்தனர்.

#BREAKING || "அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்" - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் ஆளுநர் அதனை மீற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவிலில் ரீல்ஸ் வீடியோ.. சாமிக்கு என்ன மரியாதை?.. பெண் தர்மகர்த்தாவுக்கு கண்டனம்

கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் தர்மகர்த்தா உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஆம்னி பேருந்துகளுக்கு வரி கிடையாது.. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Sanjiv Khanna: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி... சஞ்சீவ் கன்னாவை முன்மொழிந்த சந்திரசூட்!

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார். இதனையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னர் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ட்ரெச்சரில் மூதாட்டி.. கொட்டும் மழையில் நேர்ந்த கொடுமை - நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி காட்சி

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொட்டும் மழையில் மூதாட்டியை காக்க வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது, சிடி ஸ்கேன் எடுக்க பணம் கட்டும் வரை கொட்டும் மழையில் ஸ்ட்ரெச்சரில் மூதாட்டி இருந்துள்ளார்.

கூல் லிப் பாக்கெட்டில் ஏன் மண்டை ஓடு படம் இல்லை - நீதிமன்றம் கேள்வி

மாணவர்கள், இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்களை முற்றிலும் தடை செய்யக்கோரிய வழக்கில், கூல் லிப் போன்ற போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க எம்மாதிரியான வழிகாட்டுதல் வழங்கலாம் என மத்திய, குட்கா நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ்.. தொழிலாளியை அடித்து துவைத்த திமுக நிர்வாகி

வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் வெளியிட்ட தொழிலாளியை தாக்கி மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ வைரலானதை அடுத்து, திமுக நிர்வாகியை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

சவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை ஹோட்டலில் சவர்மா சாப்பிட்ட 7 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

2024-ல் அடிக்கடி ரயில் விபத்து.. நடுங்கும் மக்கள்..என்ன காரணம்..? - அதிர்ச்சி ரிப்போர்ட்

கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்தாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் ரயில் விபத்துகள் பயணிகளை கவலையடைய செய்துள்ளது.