K U M U D A M   N E W S

வானிலை

சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (செப்.25) கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவைக்கு கனமழை; பிற மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வெப்பநிலையும் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்குக் கனமழை தொடரும்: தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்குக் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை: மணலியில் 27 செ.மீ மழை பதிவு!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மேக வெடிப்பு காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Chennai Rains:சென்னையில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை – 30 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

சென்னையில் இன்று அதிகாலை முதலே இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் காலை 8 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு; தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 17) நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை.. தென் மாநிலங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், வெயில் தணிந்து இதமான சூழல் ஏற்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் மழை தரும் பருவமழை.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5 ) அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்: மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்குக் கனமழை மற்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை: டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை-ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

மோசமான வானிலை நிலவுவதால் டெல்லி விமான நிலையம் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வயநாட்டில் அதி கனமழைக்கு ரெட் அலர்ட்.. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்!

கேரளா மாநிலம் வயநாட்டில் இன்று முதல் ஜூலை 20 வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

சென்னையில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை.!

அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது

திருவண்ணாமலையில் கொட்டித்தீர்த்த கனமழை... அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

திருவண்ணாமலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது

சென்னையில் தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு 110 விழுக்காட்டிற்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு!

சென்னையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 110 விழுக்காட்டிற்கு மேல் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

இந்த 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்- வானிலை மையம் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வேகமெடுத்து வரும் நிலையில், அதன் தாக்கம் கேரளா ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் எதிரொலிக்கிறது. அந்த வகையில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

இன்றும் ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்தவரை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ள நிலையில் இன்றும், 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் கனமழை.. மலைப்பயிர்கள் பெரும் சேதம்.. விவசாயிகள் கவலை!

நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தலைநகர் டெல்லியில் விடிய விடிய கனமழை பெய்ததால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தலைநகரின் இயல்புநிலை கடும் பாதிப்புக்குள்ளானது.

கேரளாவில் முன்கூட்டியே தொடங்கும் பருவமழை: 24 மணி நேரத்திற்குள் தொடங்க வாய்ப்பு!

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.